ஆசாமிகளும் சாமியாகலாம்......சாமியே சரணம் ஐயப்பா

  கோமதி   | Last Modified : 04 Dec, 2018 10:18 pm
normal-persons-can-also-become-saint-swamiye-saranam-aiyappaa

பற்றற்ற உலகில் பற்று வைத்திருக்கும் மனித இனத்துக்கு ஆன்மிகப்பேறு  கிடைத்தால் மட்டுமே ஞானம் என்னும் முக்தி கிடைக்கும். கடவுள் ஒன்றுதான். அவரது அவதாரங்களால் பல்வேறு ரூபங்களில் பல்வேறு பெயர்களில் வழங்கி வருகிறோம். புற மற்றும் அகத்தூய்மையால் மட்டுமே கடவுளை அடைய முடியும். அத்தகைய தூய்மையை கடவுளை வணங்கும் காலத்திலாவது கண்டிப்பாக கடைப்பிடித்தே ஆகவேண்டும். அப்படி பிரயத்தனம் செய்து வணங்கப்படும் கடவுளில் ஐயப்பனும் ஒருவர்.

ஆசாமிகள் கூட சாமியாக்கப்படுவது இவருக்காக வேண்டி விரதமிருந்து மாலை அணியும் போதுதான். விரதம் மட்டுமல்ல இவரைத் தரிசிக்கவும் சில கடுமையான நன் விதிமுறைகளைப் பின்பற்றிதான் ஆகவேண்டும். மொழி 18, ராகம் 18, சித்தர்கள் 18, தேவாசுர யுத்தம் 18 (ஆண்டுகள்), ராம இராவண யுத்தம் (18 மாதங்கள்)மகாபாரத யுத்தம் நடைபெற்றது 18 (நாள்கள்) கீதையின் அத்தியாயம் 18, நவகிரகங்களும் அவற்றின் அதிதேவதைகளும் இணைந்து 18 என சிறப்புகளைப் பெற்றிருக்கும் எண் 18. ஐயப்பனை தரிசிக்க வேண்டுமானால் 18 படிகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். நாம் கடக்கும் ஒவ்வொரு படிகளும் ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றன. சபரிமலையைச் சுற்றி 18 மலைகள் 18 தெய்வங்கள் இருக்கின்றன. இந்த தெய்வங்கள் ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படிகளிலும் 18  தெய்வங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஐயப்பன் தன்னிடம் வைத்திருந்த வில்,வாள், வேல், கதை, பிந்திபாவம், பரிசை, அங்குசம், ஈட்டிம், கைவாள், சுக்குமாந்தடி, பாசம், சக்கரம், மழுக், கடுத்திவை, குந்தகம்,பரிசை,முஸல, ஹலம் என்னும் 18 கருவிகளைக் கொண்டு உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆசாபாசங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுபட நம்மைக் கட்டுக்குள்  வைத்திருக்கும் வித்தையை ஐயப்பன் கற்றுத் தருகிறார். 

காமத்தில் பற்று உண்டானால் மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடையும், கோபம் குடியைக் கெடுத்து சுற்றத்தை அழிக்கும், பேராசை உள்ளதையும் அழித்துவிடும், வெறிபிடித்தவனை ஆண்டவன் அருகில் வைக்கமாட்டான், நான் என்ற அகம்பாவம் அசுர குணத்தைக் கொடுக்கும், விருப்பு வெறுப்பு இன்றி நன்மையை மட்டும் செய்ய வேண்டும், மனதில் தூக்கும் பொறாமையே அவனை அழித்துவிடும், எல்லாம் ஆண்டவனே,அவனை மீறிய செயல் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும். 

ஆம் அவரை நினைத்து வழிபடும்போது மெய், வாய், கண், மூக்கு, செவி, சினம், காமம், பொய், களவு, வஞ்சம், சுயநலம், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்ர, தாமஸ், ராஜஸ போன்ற 18 குணங்களை வென்றால் ஐயப்பனிடம் அடைக்கலம் வேண்டலாம்.  எப்படியாவது வாழலாம் என்பதை விடுத்து மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இத்தகைய விரதத்தை ஐயப்ப பக்தர்கள்  அனுஷ்டிக்கிறார்கள். 18 விதமான குணங்களில் நல்லனவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும் தீயவற்றை விலக்க வேண்டும் என்பதை மனதில் உருவேற்றி அப்படியே நடந்து ஐயப்பனை தரிசித்தால்,ஐயப்பன் அருள் கிட்டும். அதனால் தான் ஆசாமியானவர்கள் ஐயப்பனைக் காண செல்வதற்கு தயாராகும் போதே 18 தத்துவங்களையும் உணர்ந்து அதைப் போற்றி, நல்வழியில் மனத்தோற்றத்திலும், புறச்செயல்களிலும் ஈடுபடும் சாமியாகவே மாறி சபரிமலை சாஸ்தாவிடம் சரணடைகிறார்கள்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close