வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்

  கோமதி   | Last Modified : 08 Dec, 2018 11:53 am

kolam-that-brings-goddess-mahalakshmi-to-our-house

மாவிலைத் தோரணமும், வாழைப்பந்தலும், வாசலை அடைக்கும் கோலமும்  மங்களகரமான விஷயங்களில் மங்காமல் இடம் பெறும்.  கோலம் என்றால் அழகு என்று பொருள். பெண்களை தெய்வீகமாக்கும் திலகம் போல,வீட்டை அழகாக்குவது வாசலில் இடப்படும் கோலம். கோலமிட்ட மனைப்பலகையின் மீதுதான் மஞ்சல் பிள்ளையாரை வைக்கிறோம். கோலம் தெய்வீகம் தன்மை சார்ந்தவையாகவே  பார்க்கப்படுகிறது. அதனால்தான் ஹோமங்கள், சடங்குகள் போன்ற வைபவங்களின் மீது கோலமிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். சங்க இலக்கியத்தில் கோலம் இடப்பட்ட இடத்தைக் களம் என்று  கூறுகிறார்கள்.

கோலத்தில் ஒரு தத்துவமே அடங்கியுள்ளது. புள்ளிகள் சிவப்பெருமானாகவும், அதைச் சுற்றி போடப்படும் கோடுகள் சக்தியாகவும் சொல்லப்படுகிறது. சக்தியில்லையேல் சிவனில்லை.சிவனில்லையேல் சக்தியில்லை. இரண்டும் சேர்ந்துதான் இறைநிலை. இதுதான் வாழ்க்கை நிலை என்று ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையைக் கற்றுத்தருகிறது. மார்கழி மாத கோலம் மிகவும் விசேஷமிக்கது. வாசலில் பசுஞ்சாணம் தெளித்து,  தண்ணிரை தெளித்து வாசலை அடைத்து பச்சரிசி மாவு கலந்து கோலம் போட்டு சுற்றிலும் காவியிட்டு (செம்மண்) பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து பூசணிப் பூ செருகி .. அட.. அட.. காண கண் கோடி வேண்டும். வீட்டு வாசலில் வாசம் செய்யும் மஹாலஷ்மி அகமகிழ்ந்து வேண்டிய வரம் அருளுவார். கோல வெண்மை பிரம்மாவையும் , காவி சிவபெருமானையும், பசுஞ்சாணத்தில் உள்ள பசுமை விஷ்ணுவையும் குறிக்கும். கோலத்தின் நடுவில் இருக்கும் பூசணி பூவும், செம்பருத்தி பூவும் செல்வத்தை அளிக்கும். வசதிபடைத்தவர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய இயலும். ஆனால் ஏழைகள் பச்சரிசி மாவில் இடப்படும் கோலத்தை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டு மீதம் இருக்கும் மாவையும் எடுத்துச் சென்று சேமிக்கத் தொடங்கும். உயிரினங்களுக்கு உணவளிக்கும் இந்தச் செயல் ஆன்ம நேயத்தையும் ஆன்மிகத்தையும் சிறப்பிக்கும் என்றே சொல்லலாம். 

வீட்டுச்சுவரை ஒட்டி போடப்படும்  கோலம் நம் வீட்டிற்குள் தீய சக்திகளை அனுமதிக்காது. கோலம் முழுவதும் பூக்களை வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.இறைவனின் சக்கர சின்னங்களை பூஜையறையில் மட்டும்தான் கோலமாக போட வேண்டும். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றாக இணைந்து பிரம்மாண்டமான யந்திரமாக இருக்கிறது.  பல புள்ளிகளைக் கொண்டு இணைக்கப்படும் கோலமும் சக்தி யந்திரமாக கருதப்படுகிறது. நமது மூதாதையர்கள் கற்றுத்தந்த வழிபாட்டு முறைகள் அனைத்திலும் வியக்க வைக்கும் விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. அவற்றில் பச்சரிசி மாவு கலந்த வைகறைக் கோலமும் முக்கியமானது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.