ஆன்மீக கதை – சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன்

  கோமதி   | Last Modified : 11 Dec, 2018 03:48 pm
spiritual-story-god-is-beyond-doubt

பல்வேறு ரூபங்களில் பல்வேறு பெயர்களில் பல நிலைகளில் கடவுளை வணங்கினாலும், கடவுள் ஒன்றுதான்.கடவுளின் அருளைப் பெறும் வழியும் ஒன்றுதான். கடவுளை அடைய ஆன்மிக ஞானம் தேவையில்லை. கடவுளின் மீது அன்பும் ,நம்பிக்கையும் வேண்டும்.கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற எண்ணம் இருக்க வேண்டும். நாம் செய்யும் காரியங்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற அச்சம் மனதில் இருக்க வேண்டும். பக்தியை வெளியிலும் கள்ளத்தை உள்ளத்திலும் வைத்து வா வா என்றால் வருவானா இறைவன்…???

சிவபுரி என்னும் ஊரில் முருகப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். சரியான சந்தேகப்பிராணி அவன் .எதைச் செய்தாலும் எதைக்கண்டாலும் சந்தேகக் கண்ணோடே பார்ப்பான். எளிதில் யாரையும் நம்பமாட்டான். குடும்பத்தில் இருப்பவர்களிடமே சந்தேகத்தோடு நடந்துகொள்வான். ஆனால் கடவுளிடம் ஈடுபாடு உடையவன். இல்லறவாழ்வைத்  துறந்து கடவுளின் அருளைப் பெற வேண்டி துறவறம் மேற்கொண்டான். காட்டில் கடவுளை நினைத்து தவம் புரிந்தான். சில நாட்கள் கழிந்தது.கடவுள் வரவில்லை. மாதங்கள் ஆகியது, அப்போதும் கடவுள் வரவில்லை. வருடங்கள் ஆகியது.

அனைத்திலும் பக்குவமடைந்த அவனுக்கு சந்தேக புத்தி மட்டும் போகவில்லை. இவனது தவத்தை இறைவன் மெச்சினாலும் இவனது சந்தேகபுத்தியை நினைத்து இவனிடம் விளையாட  நினைத்தார். முதலில் ஒரு பக்கிரியாக தோன்றி அவன் முன் நின்றார். மகனே  நெடு நாட்களாக தவம் புரிகிறாயே… கடவுளைக் காணவா என்றார். இவர் நம்மிடமிருந்து எதுவும் பறித்துக்கொண்டு போகப்போகிறாரோ என்ற சந்தேகத்துடன் அவரைப் பார்த்தான். பக்கிரி அவனருகில் அமர்ந்து சிறிது காலம் நானும் உன்னுடன் தங்கி கடவுளைத் தரிசிக்கப்போகிறேன் என்றார். அடுத்த நொடியிலிருந்து இவன் கடவுளை விடுத்து பக்கிரியைக் கவனிக்க ஆரம்பித்தான்.பக்கிரி வேடத்திலிருந்த கடவுள் புன்னகைத்தப்படி விடைபெற்றார். இவனுக்கோ பரம சந்தோஷம்… இனி பரமனை நினைக்கலாம் என்று மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தான்.

இம்முறை கடவுள்   கூன் விழுந்த வயோதிகனாய் பார்க்கவே சகிக்காத தோற்றத்தில் வந்தார். வந்தவர் தம்பி, நீகடவுளைக் காண துடிப்பது போல நானும் துடிக்கிறேன். அவர் வரும்வரை காத்திருந்து விட்டு மீண்டும் சென்று விடுகிறேன் என்றார். அது எப்படி, இங்கே கடவுளுக்காக நான் காத்திருக்கிறேன். கடவுள் வந்ததும் இவனின் நிலையைக் கண்டு இவனுக்கு வரம் கொடுத்துவிட்டால் நாம் என்ன செய்வது என்று கடவுளையே சந்தேகப்பட்டான். மறுபுறமே நாம் தான் கடவுளை நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறோம். அவருக்கு நம்மை கவனிக்க நேரம் ஏது. அவர் வரமாட்டார் என்று  சந்தேகத்தோடே எதிர்பார்த்தான். புன்னகைத்த கடவுள் கூன் வேடத்திலிருந்து விடைபெற்றார். இவ்வளவு நாள் வராத கடவுளா இனி வரப்போகிறார் என்று நினைத்தான். மரண தறுவாயில் யமதூதர்கள் வந்து அழைத்துச் சென்றார்..

கடவுளைக் கண்டதும் நீதான்  எம்மைக் காக்கும் கடவுளா? எனக்கு உன்னைக் கண்டால் சந்தேகமாக இருக்கிறதே என்றான். கடவுள் அவன் முன் பக்கிரியாகவும், கூன் விழுந்த வயோதிகனாகவும் தோன்றி நடந்ததை விளக்கினார். என்னை மன்னித்துவிடுங்கள் சாமி.. தாங்கள் யார் என்று முன்னமே கூறியிருக்கலாமே… என்றான். கொஞ்சம் நிதானித்திருந்தால் என்னை நீ கண்டிருக்கலாம். ஆனால் நீதான் சந்தேகம் என்னும் பேயைப் பக்கத்திலேயே வைத்திருந்தாயே….கடவுள் எங்கும் நிறைந்திருப்பார் என்பதை நம்பாமல் உனக்குள் ஓர் உருவத்தை வைத்து இருந்தாயே.. நான் வருவேனா மாட்டேனா என்ற சந்தேகமே உன் மனம் முழுக்க வியாபித்திருந்தது. உனக்கு முன்னால் நான் தோன்றியும் என்னை புரிந்துகொள்ளாத நீ என்ன பக்தன் என்றார். தலைகவிழ்ந்தான் பக்தன். ஆம் நம் அருகிலேயே இருந்து நாம் செய்யும் பாவ புண்ணியங்களைக் கணக்கு  போட்டுகொண்டிருக்கும் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது உண்மைதான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close