யார் ...எத்தனை முக ருத்திராட்சம் அணியலாம்? (பாகம் – 2)

  கோமதி   | Last Modified : 19 Dec, 2018 10:51 am
who-can-wear-which-type-of-ruthiratcham-part-2

நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)

அனைவரும் அணிய வேண்டிய நல்அதிர்வுகளைக் கொண்டவை ருத்ராட்சகமென்பதைப் பற்றி பார்த்தோம். அந்த ருத்ராட்சகத்தில் 21 முகங்கள் வரை உண்டு. 1முதல் 14 வரை உள்ள முகமே நாம் அணிவதற்கு ஏற்றது.ஒரு முக ருத்ராட்சம் ஏகமுக ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகிறது.ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது.  இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும். மோட்சத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்று சொல்வர். இதற்கான மந்திரம்  - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ..
இந்த ஒரு முக ருத்ராட்சகம் அனைத்து முகங்களையுடைய ருத்ராட்சகத்துக்கு அரசனாக கருதப்படுகிறது. இதை அணிபவருக்கு தூய உணர்வை உண்டாக்குகிறது. அனைத்து செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். 

இரண்டு முக ருத்ராட்சகம் துவிமுகி என்றழைக்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் சந்திரனின் அதிர்வைப் பெற்றிருக்கிறது. இரண்டு முகமுடைய இந்த ருத்ராட்சகம் சிவனும் பார்வதியும் இணைந்த உருவமனா அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது.  இதை அணிந்தால் உறவினர்களுக்குள் ஒற்றுமை, கணவன் மனைவி ஒற்றுமை , நல்ல நண்பர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேண்டிய பொருள் வளத்தை அளிக்க வல்லது. உடலில் சுவாசம் சம்பந்தப்பட்ட குறைபாடு உள்ளவர்கள், சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அணியலாம். இதற்கான மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ

மூன்று முகம் கொண்ட ருத்ராட்சகத்தை அணிந்தால் ஆளும் கோள் செவ்வாயின் அதிர்வை உணரலாம்.  நெருப்பு கடவுள் என்றழைக்கப்படும் செவ்வாய் அதிர்வைக் கொண்ட இந்த ருத்ராட்சகம் நாம் வாழ்க்கையில் செய்த பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றி தூய்மை நிலையை அடைய வைக்கிறது. எப்போதும் மனச்சோர்வு, வாழ்க்கையில் துன்பம் என வாழுபவர்களுக்கு இந்த மூன்று முகம் ருத்ராட்சகம் நன்மை பயக்கும். இதற்கான மந்திரம் -ஓம் கிளீம் நமஹ

நான்கு முகம் ருத்ராட்சகத்தை அணிந்தால் புதனின் அதிர்வை உணரலாம். புதன் என்பது பிரம்மாவைக் குறிக்கிறது. இதை அணிவோருக்கு  பிரம்மனைப் போல் ஆக்க சக்தி கிடைக்கிறது. கல்வியில் சாதிக்க விரும்பும் மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்றது. படைக்கும் தொழிலான பிரம்மனைப் போல் அறிவியல் கண்டுபிடிப்புகளையும்,  நினைவுத்திறனையும், புத்திக்கூர்மையும் கொடுக்க வல்லதாக நான்முகம் ருத்ராட்சகம் பயனளிக்கிறது. இவற்றை கைகளிலும் அணியலாம் என்பது சிறப்பு. இதற்கான மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ

ருத்ராட்சகத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கவ்வளவு உண்மை தேவையானவற்றை மட்டும் அணிவது. பிரச்னைகள் தீர்வதற்கு என்பதைத் தாண்டி மனம் அமைதியை நோக்கி பயணிக்கவே ருத்ராட்சகம். இதைத் தவறாகவோ விதிமுறைக்கு  மீறியோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். 

தொடரும் ....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close