எதிர்மறை சக்திகளிடமிருந்து காப்பாற்றி மன அமைதியைத் தரக்கூடிய, ருத்ராட்சம் (பாகம் - 4 )

  கோமதி   | Last Modified : 20 Dec, 2018 05:22 pm
rudraksham-which-can-save-us-from-the-negative-forces-and-gives-peace-of-mind-part-4

நவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)

யார் ...எத்தனை முக ருத்திராட்சம் அணியலாம்? (பாகம் – 2)

இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது – ஐந்து முக ருத்ராட்சத்தின் சிறப்புகள் (பாகம் – 3)

ருத்ராட்சத்தை எல்லோரும் அணியலாம் . ருத்ராட்சத்தை மாலையாக கோர்த்து   தொடர்ச்சியான வழிபாட்டுக்கு  பயன்படுத்தலாம் என்பதையும் ருத்ராட்சம்  கட்டுரையில்  படித்துவருகிறோம்.  1 முதல் 21  வரையிலான் முகம் கொண்ட ருத்ராட்சையில்  இதுவரை 5 முகம் கொண்ட ருத்ராட்சை வரை அறிந்தோம். இந்தக் கட்டுரையில் அடுத்த 6 முகம் முதல் 14 முகம் வரையிலான ருத்ராட் சத்தின் மகிமைகள் பற்றி பார்க்கலாம்.

6 முக ருத்ராட்சம் கார்த்திகேய என்று அழைக்கப்படுகிறது.  இதை ஆளும் கோள் வெள்ளி ஆகும். சிவபெருமானின் இரண்டாவது மகனான கார்த்திகேயன் கடவுளைக் குறிக்கும் இந்த ருத்ராட்சம் வலதுகையில் அணிந்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. எப்போதும் ஒருவித அச்சத்துடனும், மனதில் படபடப்பையும் கொண்டு இருப்பவர்கள் இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் தோற்றத்தில் பொலிவு கூடும்,மனதிலும் தைரியம் பிறக்கும். வாக்கில் நேர்மையும் கம்பீரமும் உண்டாகும்.குறிப்பாக பெண்களுக்கு சுப்ரமணியன் அம்சமாய் அமைந்து கர்ப்ப தோஷத்தை நீக்குகிறது.

இந்த ருத்ராட்சத்துக்கான மந்திரம் –ஸ்வாமி கார்த்திகேய நமஹ…

7 முக ருத்ராட்சம் மகாலஷ்மியைக் குறிக்கும். இவை அனந்த என்று அழைக்கப்படுகிறது. இவற்றை ஆளும் கோள் சனி. பூலோக சுகங்களைக் குறையில்லாமல் பெற்று வாழ்வில் மேன்மைகளைப் பெறுவதற்கு இந்த வகை ருத்ராட்சத்தை அணியலாம். விஷ ஜந்துக்களும்,நாக பயங்களையும் உடையவர்களின் பயத்தை இவை நீக்குகிறது.

இந்த ருத்ராட்சத்துக்கான மந்திரம் –ஓம் மஹாலட்சுமியே நமஹ…

8 முக ருத்ராட்சம் துர்காதேவியின் அம்சமாக சொல்லப்படுகிறது. இதை ஆளும் கோள் ராகு. இதன் பகவான் விநாயகர் என்பதால் இவை விநாயக என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இதை அணிபவர்களுக்கு சகல வெற்றிகளும், எல்லா பேறுகளும் எதிரிகள் இல்லாத நிலையும் உண்டாகும். இவை விநாயகரின் ரூபமாகவும் அஷ்ட வசுக்களின் தத்துவத்துடனும் திகழ்கிறது. இந்த எட்டு முக ருத்ராட்சத்தை கவனத்துடன் பயன்படுத்துவது நல்லது.

இந்த ருத்ராட்சத்துக்கான மந்திரம் –ஓம் கணேசாய நமஹ.

9 முக ருத்ராட்சம் பைரவ ருத்ராட்சம் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்காதேவியின் அம்சமாக இது கருதப்படுகிறது. இதை அணிபவர்கள் இந்திரனுக்கு நிகராக வாழ்வார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பார்கள். சக்தியின் அருளால் இதை அணிபவர்களுக்கு வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்.

இந்த ருத்ராட்சத்துக்கான மந்திரம் –ஓம் நவதுர்காய நமஹ.

10 முக ருத்ராட்சம் தசமுக என்று அழைக்கப்படுகிறது. இவற்றை ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. இதை அணிந்தால் நவகிரக கோள்களினால் ஏற்படும்  அனைத்து தீய பலன்களிலிருந்தும் காக்கும். இவரது சந்ததியினரையும் காக்கும் தன்மை இந்த ருத்ராட்சத்துக்கு உண்டு. சிவபுராணம் இந்த ருத்ராட்சத்தை சாட்சாத் விஷ்ணுவின் சொரூபம் என்றே வர்ணிக்கிறது. குறிப்பாக பத்து திசைகள்,பத்து அவதாரங்களின் செல்வாக்குடன் திகழ்ந்து எதிர்மறை சக்திகளிடமிருந்து காப்பாற்றி மன அமைதியைத்தரக்கூடியது.

இந்த ருத்ராட் சத்துக்கான மந்திரம் –ஸ்ரீ நாராயணாய நமஹ…

நாம் சொன்னபடி நீங்கள் எந்த ருத்ராட்சம் அணிவதாக இருந்தாலும் அது உங்களுக்கு ஏற்றவையாக இருந்தால் மட்டுமே மேற்கண்ட பலனைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள். அடுத்த கட்டுரையில் எஞ்சியுள்ள ருத்ராட்ச முகங்களின் பலன்களைப் பார்க்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close