காலனின் தவத்தைப் பூர்த்தி செய்த சர்வேஸ்வரர் (மார்கண்டேய புராணம் 2)

  கோமதி   | Last Modified : 24 Dec, 2018 11:24 am
kalan-s-penanace-fulfilled-by-lord-siva-margandeyan-puranam-2

மார்க்கண்டேயன் பக்தன் என்பதற்காக அவனது விதிமுடிந்த நிலையில் அழைத்துச் செல்ல வந்த காலனை  சிவபெருமான் ஏன் வதைக்க வேண்டும்? யமதர்மன் சிவபெருமானை தினமும் வழிபடுபவன். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அவரவர்களது கர்மவினைக்கேற்ப காலமறிந்து தண்டனை கொடுக்கும் பொறுப்பைக் கொண்டவன். தேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் இறைவனின் திருவடிகளை தலையில் வைக்க விரும்பினார்கள். ஆனால் யமதர்மன் இறைவனது திருவடிகளை இதயத்தில் சுமக்க விரும்பினான். நாள்தோறும் தனது வழிபாட்டில் சிவபெருமானிடமும் இதைத்தான் வேண்டினான். இறைவனது திருவடி இதயத்தில் படுவதற்கு மார்க்கண்டேயன் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டான். 

சர்வமும் ஆளும் சர்வேஸ்வரனுக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாதா? மார்க்கண்டேயன் தன்னை ஆலிங்கனம் செய்வதும், காலனின் பாசக்கயிறும் தம்மீடு படுவதும் அவன் அறிந்தே நடந்ததாயிற்றே.  மார்க்கண்டேயன் முதலிலேயே சிவனை ஆலிங்கனம் செய்திருந்தால்  யமதர்மன் பாசக்கயிறை இறைவனின் மீது வீசியிருக்க மாட்டான். ஆனால் லிங்கத்தின் மீது பாசக்கயிறை விழச்செய்து மார்க்கண்டேயனுக்கும், காலனுக்கும் காட்சிதந்து அருள்புரிந்ததோடு காலனின் இதயத்தில் தனது திருவடியைப் பதித்து அவனுடைய தவத்தைப் பூர்த்தி செய்தார் சர்வேஸ்வரர்.

அர்த்தநாரீஸ்வரராக விளங்கிய சிவபெருமானின் இடதுபுறம் உமையவள் பார்வதிதேவிக்குரியது.  மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசிய  யமனை சிவனின் இடப்பாகத்தில் இருந்த சக்திதேவியின் திருவடிதான் உதைத்தது. அதனால் யமதர்மனின்  இதயத்தில் பதிந்த திருவடி அம்பிகையின் அம்சமாக அமைந்தது  காலனின் பாக்கியம்.யமதர்மன் தர்மத்துக்கு தலைவணங்கும் தர்மதேவன். மார்க்கண்டேயனுக்கு சக்தியின் அருள் இருந்ததால் யமன் நெருங்கிய வேளையில் ஆயுள் அதிகரித்தது. மார்க்கண்டேயனுக்கு  சிவப்பெருமான் தீர்க்காயுள் தந்த புண்ணிய  பூமி தஞ்சையிலுள்ள திருக்கடையூர்.அபிராம பட்டரின் அந்தாதித் தமிழ் அன்னையின்  பெருமையையும் அருளையும் பற்றி விளக்குகிறது. 

நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளையும் பெற சிவபெருமானைத்  தஞ்சமடைவோம். வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close