ஆன்மீக கதை - நமது விதியின் போக்கை தீர்மானிப்பது எது ?

  கோமதி   | Last Modified : 03 Jan, 2019 01:23 pm
spiritual-story-what-determines-the-course-of-our-destiny

நமது விதியின் போக்கை கர்மாதான் தீர்மானிக்கிறது..விதி வலியது.. விதியை மதியால் வெல்லாலாம் ஆனால் கர்மாவை வெல்ல முடியுமா? விதியை வெல்ல வேறுவழியை எண்ணி நாம்  கடந்தாலும் விதியோ மற்றொரு வழியில் வந்து நம் முன் நிற்கும். முற்பிறவியில் செய்த பாவம் இப்பிறவியில் அனுபவிக்கிறாய் என்று கஷ்டப்படுவர்களைப் பார்த்து சொல்கிறோம். அல்லது கஷ்டப்படும் நாமே கூட நினைக்கிறோம். ஆனால் கர்மவினை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல.. தவசீலர்களுக்கும்... கடவுளுக்கும் கூட உண்டு என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றும் இந்து சமயத்தின் முக்கிய தூண்கள் என்று சொல்லலாம். இவை மூன்றிலும் இணையற்று போற்றத்தக்கதாக வாழ்ந்தவர் அப்பைய தீட்சிதர். சிவ தத்துவத்தை பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தொண்டர்களுக்காக இயக்கமே நடத்தியவர். மிகச்சிறந்த புலமையால் மக்களிடம் புகழ் பெற்று வாழ்ந்தார். ஆனால் இவருக்கும் ஒரு பிரச்னை இருந்தது. தீராத சூதக நோயால் அவதியுற்று இருந்தார். யோக சக்திகளை அதிகம் பெற்றவராக இருந்தாலும் தனது சூதக நோயை மட்டும் வெளியேற்றாமல் அனுபவித்துக்கொண்டே இருந்தார். சூதல நோயால் அவதிப்படும்போதெல்லாம் கடுமையாக வாடினார். அச்சமயம் அவரால்  தியானம் செய்யவோ, சிவ தத்துவத்தை விளக்கவோ இயலாமல் போயிற்று. முற்பிறவியின் கர்மாதான் இப்போதைய சூளகநோயாக உருவெடுத்துள்ளது. இதை இறக்கினால் இதற்காக மீண்டு ஒரு பிறவி எடுக்க நேரிடும். அதேநேரம் இந்தத் தீராத வலியினால் சிவத் தொண்டு செய்வதையும் தவிர்க்க கூடாது என்று எண்ணியவர் ஒன்று செய்தார். முக்கியமான நேரங்களில் ஒரு தர்ப்பை புல்லை அவருக்கு அருகே போட்டு அந்தப்புல்லின் மேல் தன்னுடைய யோகசக்தியால் தனது வலியை இறக்கிவிடுவார். அவர் பணி செய்து முடிக்கும் வரை சூதக வலி புல்லுக்குப் பாய்ந்து புல் அப்படியும் இப்படியும் துள்ளிக்கொண்டே இருக்கும். பிறகு புல்லிடமிருந்து அவ்வலியைப் பெற்றுக்கொள்வார்.
ஒருநாள் பண்டிதர் ஒருவருடன் சிவதொண்டு குறித்து விவாதம் செய்தபோது  எப்போதும் போல தனது வலியை தர்ப்பையில் இறக்கி வைத்து விட்டு தொடர்ந்தார். பண்டிதர் தர்ப்பையின் துள்ளலை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு விவாதம் தொடர ,ஒரு கட்டத்தில் விவாதம் தீவிரமாகி இருவரும் எழுந்து நின்றனர். தர்ப்பையின் துள்ளலும் அதிகமாயிற்று. விவாதத்தை விடுத்து பண்டிதர் தர்ப்பையின் துள்ளல் பற்றி அப்பைய தீட்சிதரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அப்பைய தீட்சிதர் தனது தீராத வயிற்றுவலி பிரச்னையைச் சொல்லவும் பண்டிதருக்கு மேலும் ஆச்சரியமாகிற்று. 

உங்களுக்குள் தவவலிமை முன்பு இவையெல்லாம் ஒன்றுமேயில்லை. நிரந்தரமாகவே உங்களால் தீர்த்துக்கொள்ள கூடிய சிறு பிரச்னையை ஏன் அனுபவிக்க நினைக்கிறீர்கள் என்றார். என் கர்ம வினை இது. நான் முற்பிறவியில் செய்த சிறு பாவம் இப்பிறவியில் தீராத இந்தவலி ஏற்பட்டுள்ளது. நான் இப்போது இதை என் தவவலிமையால் நிரந்தரமாக நீக்கலாம். ஆனால் இந்த கர்மவினையை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி எடுக்கவேண்டும். அதனால்தான் புல்லின் மீது என் வலியை இறக்கி மீண்டும் ஏற்கிறேன் என்று விளக்கமளித்தர். ஆக தவசீலர்களே தங்களது கர்மவினையில் இருந்து தப்பிக்க வழியிருந்தும் அதை செய்யாமல் அனுபவித்து தீர்க்கவேண்டியது என்று  சொல்லும்போது சாதாரண மனிதர்களான நாமும் கர்மத்தை அனுபவித்தே தீர வேண்டும். கர்மத்தைத் தொலைத்துவிடு என்று இறைவனை வேண்டாமல் அதைக் கடக்கும் பக்குவத்தை எனக்குக் கொடு என்று வழிபட வேண்டும். நாம் செய்த நன்மை தீமைகளைப் பொறுத்தே கர்மாக்கள் நமக்கு பின் தொடர்ந்து செல்வதால் இப்பிறவியில் நன்மையை மட்டுமே செய்ய பழகுவோம். இயலவில்லையென்றாலும் தீமையின் பக்கம் தலை சாயாது இருப்போம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close