புதுச்சேரி  ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை ஆசிரம ஆன்மிக வரலாறு

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Feb, 2019 01:13 pm
sri-aurobindo-ashram

புதுச்சேரி  ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை ஆசிரமம் ஆன்மிக ஆலயமாக திகழ்கிறது. உலகின் மூலை முடுக்கெல்லாமிலிருந்து இருந்து மக்கள்  ஆசிரமத்திற்கு வந்து தரிசித்து மன நிம்மதியோடு செல்கிறார்கள். தேடி வந்து நாடி அழைக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் அருள் ஒளிகாட்டி சூட்சும ரீதியில் அவர்களைக் காத்து அருள்புரிகின்றனர்.

ஸ்ரீ அரவிந்தரின் பக்தர்கள் கீதையை போல சாவித்ரி காவியத்தைப் படிக்கிறார்கள்.  எந்தக் கோவிலில் செய்த பிரார்த்தனைகள் பலிக்காதபோதும், இங்கு வந்து பிரார்த்தனை செய்தால்  பலிக்கும் என்கிறார்கள். 'இது கர்மவினை- அனுபவிக்க வேண்டும்', என்று சொல்லிய வினைகள் கூட  நம்பிக்கை வைத்து தியானித்து பிரார்த்தனை செய்யும்போது வினைகள் தீரும் அதிசயத்தைக் காண்பதாகவும்  அவர்களது பார்வை பட்டாலே நெஞ்சும் ஆன்மாவும் நிறைவதை உணரலாம் என்று பக்தர்கள்  உணர்ச்சிப்பெருக்கோடு கூறுகிறார்கள். அலைபாயும் மனதை அடக்கி ஆளும் புகலிடமாக பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை ஆசிரமம் விளங்குகிறது என்றே சொல்லலாம். 

ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் வாழ்ந்த வீடு இது.
1926-ம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமம்  தொடங்கப்பட்டது. ஆசிரமத்தின் தலைவராக 'அன்னை' என்றும் மதர் என்றும்  அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அன்னை இறக்கும் காலம் வரையிலும் பொறுப் பேற்று நடத்தினர். ஸ்ரீ அரவிந்தரின் இறப்பிற்குப் பிறகு 1950-ல் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் சேவை நிறுவனத்தை நிறுவி அதன் தலைவராகவும் 'அன்னை'  இருந்தார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற  ஆரோவில் அன்னை யின் முயற்சியால் தொடங்கப்பட்டதே. ஆசிரமத்தின் மேற்பார்வையில்  தங்கும் விடுதிகள், கண் மருத்துவ மனை, கண் கோளாறுகளை சரிசெய்தல் என மக்களுக்கு பல்வேறு சேவை களைச் செய்து வருகின்றன.

மகாசமாதி:
ஸ்ரீ அரவிந்த பகவான் பக்தர்களுடன் தியானம் செய்யும் போதெல்லாம் அவரைச் சுற்றி ஒளிவெள்ளத்தைக் கண்டு உடலில் மின்சாரம் பாய்வதைப் போன்று உணர்ந்திருந்தார்கள்.  ஸ்ரீ அரவிந்தர் இறுதி காலத்தில் தனிமையை நாடி கடைசி 24 ஆண்டுகள் தனிமையும், மௌனமும் பூண்டிருந்தார். அதிமன சக்தியை உலகுக்கு கொண்டு வரும்  முயற்சியில் தேவைப்பட்டால் நான் என் உடலை விட்டு  நுண்ணுடலில் சென்று போராடுவேன் என்றார். 1950 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று இறையாற்றலைப் புவி மீது இயக்கி மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் மகா சமாதி ஆனார். அவர் மறைந்தும் அவரது உடலில் ஒளிவீசியது. அவர் சமாதியான 5 நாட்களுக்குப் பிறகே ஆசிரமத்தில் சர்வீஸ் மரத்தடியில்  பக்தர்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை அவரது முகப்பொலிவும் குறையவில்லை. உடலும் வாடவில்லை.

ஸ்ரீ  அன்னை   தேடி வரும் பக்தர்களுக்கு பரிபூரண அருளையும் நிம்மதியும் தரும் தாயாக இருந்தார். இவர் வேறு உலகங்கட்குச் செல்வார். சூட்சும லோகத்தில் போய், பகவானை சந்திப்பார்.  அன்னை வலியுறுத்திய விழுவதற்கு முன் என்னைக் கூப்பிட்டால்  ஓடி வந்து காப்பாற்றுவேன் என்ற அன்னை சொல்லை  பக்தர்கள் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார்கள். 1973 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி அன்னை உயிர் துறந்தார். மலருக்கும் ஆற்றல் உண்டு என்று கூறிய அன்னையின் சமாதி இயற்கை சூழலில் நறுமணமிக்க மலர்கள் பூத்துக்குலுங்கும் செடிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. 

வழிபாடு:
ஸ்ரீ அரவிந்தரின் சமாதி முன்பு பக்தர்கள் அடிபிரதட்சணம் செய்கிறார்கள். சமாதியை வலம் வருகிறார்கள். இன்னும் சிலர் தோப்புக்கரணம் போடுகிறார்கள். சமாதிக்கு அருகில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்து மனக்குறை நீங்க வழிபடுகிறார்கள். ஸ்ரீ அன்னையை  வழிபட மலர்களே முக்கிய பங்கு வகிக்கின்றது. வெற்றிதருவதற்கு ரோஜா , பக்தி சிறக்க துளசி, பகைகள் விலக சாமந்தி,  மன உறுதிக்கு எருக்கம்பூ, மன மாசுக்கள் அகல வெண் தாமரை, ஆபத்து விலக வாடாமல்லி, தவறுகள் விலகி ஒழுங்கான வாழ்வு மேற்கொள்ள செவ்வரளி, தீயசக்திகளை வெளியேற்ற வேப்பம்பூ, குடும்ப பிரச்னைகள் தீர கனகாம்பரம், திருமணம் கைகூட சம்பங்கி, கடன் பிரச்னை தீர நாகலிங்கபூ, குழந்தைப்பேறு பெற டிசம்பர் பூ என்று பிரார்த்தனைகளுக்கேற்ப அன்னையை மலர்களால் அலங்கரித்து வழிபடுகிறார்கள். 

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை வசித்த அறைகள் சமாதி தினம் அன்று பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. ஆசிரமத்தைச் சுற்றி பார்க்க வரும் பயணிகளுக்கு ஆசிரமம் சேர்ந்த தங்கும் விடுதிகள் உண்டு. ஆனால் இவற்றில் முன்பதிவு செய்து வரவேண்டும். ஆசிரமத்திற்குள் மூன்று வயத்திற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை மேலும் புகைப்படம் எடுக்கவும் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையிலும் மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும்  ஆசிரமத்திற்குள்  அனுமதி உண்டு. நூலகத்திற்குள் இருக்கும் நூல்களை ஆசிரம அதிகாரிகளின்  அனுமதியுடன் படிக்கலாம்.

அவர் கண்களில் தெரியும் ஒளி தவறான பாதைக்கு செல்லும் பக்தர்களை  தவறை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர தூண்டுகிறது.  ஒருமுறை அங்கே சென்று வந்ததாலே கிடைக்கும் மன அமைதி,  ”ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று ஸ்ரீ அன்னை சொல்லும் சத்திய வாக்கை நிரூபணம் செய்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close