ஷீரடி சாய் பாபாவின் ஆன்மிக கட்டுரை

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Feb, 2019 02:50 pm
baba-sdevotional-story

நீ எங்கே இருக்கிறாய் பாபா?
பாபாவின் பக்தர்களுக்கு குறையேயிருந்ததில்லை. குறை நேரும்படி பாபா வைத்ததும் இல்லை. கர்மாவின் புண்ணியத்தில் மலை போன்ற பிரச்னைகளை  சுமக்க நேரிட்டால் அதைத் தாங்கிக் கொள்ள பாபாவே ஓடி வந்துவிடுவார். ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசித்தால்தான் பாபாவின் அருள் கிட்டும் என்று நம்பிய பக்தருக்கு பாபா செய்த சிகிச்சை என்ன என்று பார்க்கலாமா?

ஷிண்டே என்பவர் தினமும் பாபாவுக்கு பசியாறப்படும்  நேரம் அறிந்து அந்த நேரம் கடந்த பிறகே சாப்பிடுவார். எப்போதும் பாபா அருகில் இருப்பது போல கற்பனை செய்தபடி பேசிக்கொண்டும் பஜனை செய்தும் வழிபட்டு பேரானந்தம் அடைவார். ஒருமுறையாவது ஷீரடிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்ய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் ஒவ்வொருமுறையும் அவருக்கு  தடங்கல் வந்து கொண்டிருந்தது. 

ஒருமுறை ஊருக்கு வெளியே சாமியார் ஒருவர் வந்திருப்பதாக கேள்விப்பட்டு ஷிண்டே அவரை பார்க்க கிளம்பினார். சாமியார்,  ”என்ன ஷிண்டே ஷீரடி பயணம்  இன்னும் கைகூட வில்லை  போலும்” என்றார் இவரை பார்த்து. ஷிண்டேவு அதிர்ச்சியடைந்தவாறு ”தங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டார். 
”அந்த பக்கிரிதான் நான் இந்த ஊருக்கு வருவதாக சொன்னதும் இந்த ஊரில் எனக்குத் தெரிந்த பக்தன் ஒருவன் இருக்கிறான். நான் தினமும் அவன் அருகில் இருந்து அவன் பேச்சை ரசித்து கேட்பேன். அவன், பஜனை பாடியும் என்னை மகிழ்விப்பான்.

அவன் நினைக்கும் நேரமெல்லாம் இங்கு வந்து அவனை பார்த்து செல்வது எனக்கு மிக  நன்றாக இருக்கிறது. ஆனால் திடுமென அவனுக்கு ஷீரடி வருவதற்கு ஆசை வந்து விட்டது. அப்படி வந்தால் அங்கேயே தங்கிவிடுவான். பிறகு எப்படி நான் வருவது. அதனால்தான் ஒவ்வொருமுறையும் தடங்கலை உண்டு பண்ணுகிறேன். ஆனால் அவன் வருத்தப்படுகிறான். அவன் ஷீரடி வருவது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இங்கு வந்ததும் என்னை பார்த்து விட்டு உடனடியாக திரும்பி போவதாக இருந்தால் வரச்சொல். இல்லையென் றால் அவன் அங்கேயே இருக்கட்டும். இப்போது போல் எப்போதும் நானே போய் பார்த்து வருகிறேன்’’ என்று சொல்ல சொன்னார் என்றார்.

ஷிண்டேவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. என்ன பேறு செய்தேன் பாபா.. உன்னைக் காண பெருந்திரளான பக்தர்கள் படையெடுக்க நீ என்னைக்காண இங்கு வருகிறாயா? உனக்கு அவ்வளவு முக்கியமானவனாக நான் இருக்கிறேனே இனி உன்னை  ஷீரடிக்கு அழைத்துச் செல் என்று தொல்லை செய்ய மாட்டேன் பாபா என்று அழுதார். சுற்றியிருந்தவர்கள் பாபாவுக்கும் ஷிண்டே வுக்கும் இடையே உள்ள பாசத்தைக் கண்டு நெகிழ்ந்தனர்.

பாபாவைக் காண வேண்டும் என்றால் கண்ணை மூடி நினையுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close