மலரினும் மென்மையானவர் ஸ்ரீ அன்னை - அன்னையின் சுருக்க வரலாறு                       

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Feb, 2019 04:20 pm
pondichery-annai-devotional-story

மலரினும் மென்மையானவர் ஸ்ரீ அன்னை                             
அன்னையின் சுருக்க வரலாறு:

மென்மைக்கு உதாரணமாய் மலர்களை சொல்வோம் அதனினும் மென்மையானவர்  பாண்டிச்சேரி அன்னை என்றும் மதர் என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். 1878 ஆம் ஆண்டு பாரி.  பிளாஞ்சி ராக்சே மிர்ரா என்று பெற்றோர் பெயரிட்டனர். சிறுவயதிலேயே தனக்குள் உள்ள ஆன்மிக ஆற்றலை உணர்ந்திருந்தார். தியானநிலைக்கும், சமாதிநிலைக்கும் அவ்வப்போது சென்று வருவார்.

 ஒரு முறை பாரிஸ் நகரத்தில் நெருக்கடி மிக்க  சாலையை கடக்கும்போது தியான நிலையை அடைந்தார்.  பேருந்து ஒன்று வேகமாக மிர்ராவை நோக்கி வந்தது. அதை உணரும் நிலையில் மிர்ரா இல்லை. சுற்றியிருந்தவர்கள் அச்சப்பட சட்டென்று  யாரோ ஒருவர் மிர்ராவை தூக்கி சாலையின் ஓரத்தில் தள்ளி விட் டார்.  பிறகு எழுந்த மிர்ரா  எவ்வித பதட்டமும் இல்லாமல் எழுந்து நடந்தது சுற்றியிருந்தவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

ஆன்மிகத்தில் சுழன்று கொண்டிருந்த அவரது மனத்துக்கு  நங்கூரம் பாய்ச்சுவது போல் கனவிலும் ஆன்மிகப் பெரியவர்கள் சூழ்ந்து இருந்தனர். பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தரைக் கண்டபோது  ஒளிவீசிய கண்களுடன் இந்திய தத்துவங்களும், வேத உபநிஷத்துகளும் போதித்து கனவில் வந்த மகான் இவரே. இவரே நம் குரு என்று ஸ்ரீ அரவிந்தரிடம் சரணடைந்தார்.

 ஸ்ரீ  அரவிந்தர்:
ஸ்ரீ அரவிந்தர் சுதந்திர போராட்ட தியாகியாக இருந்து பின்னாளில் ஆன்மிகப் பாதையில் தன்னை இணைத்துக்கொண்டார். மெய்ஞான தவத்தில் ஆழ்ந்தார். மிர்ரா இவரை குருவாக ஏற்றுக்கொண்டதோடு கடும் முயற்சியால் ஆசிரமத்தை உருவாக்கினார். பரிணாமம் என்பது மனிதனோடு முற்றுப் பெறுவதில்லை. ஜடமற்ற கல், தாவரம், மிருகம், மனிதன் போன்ற படிநிலைகளின் அடுத்த நிலையே உயர்நிலை. இதை அடைய ஆண்டுகள் பலவாயினும் உடலை அதற்குத் தகுதியானதாக கொண்டால்  விரைவில் அடையலாம். இதற்கு அவசியாமானது தியானப் பயிற்சி என்னும் பூரணயோகம் என்றார். இவரது பூரண யோகத்தால் சாவித்ரி மகா காவியம் உருவானது. மனிதன் யோக வாழ்வை வாழ்வதற்கான அனைத்தும் இக்காவியத்தில் உள்ளது. தான் அமைத்து தந்த யோகமுறைகளை பயன்படுத்தி உலகமக்கள் அனைவரும் யாவும் பெற வேண்டும் என்பதே ஸ்ரீ அரவிந்தரின் ஆசையாக இருந்தது. 

அன்னை போதித்த வழிபாடு:

எல்லா பிரார்த்தனைகளும் பலிக்கும். ஆனால் இறைவனின் நோக்கத்துக்கு எதிரான பிரார்த்தனைகள் எப்போதும் பலிக்காது. அதே நேரம் மனிதன் வாழ்வில் அடையும் எத்தகைய சிக்கலையும் தீர்க்கவல்லது இடைவிடாத பிரார்த்தனை என்று ஸ்ரீ அன்னை உபதேசித்திருக்கிறார்.

மேலும் ஒரு குறிக்கோளின் மீது செலுத்தப்படும் ஒருமுகமான கவனம் அக்குறிக்கோளை அடைவதற்கு துணை புரிகிறது. குறிக்கோளானது தெளிவடைகிறது.  இச்சா சக்தியின்  பயிற்சியின் வழியாக நாம் அடையவிருக்கும் இலட்சியத்தை நோக்கி ஒருமைப்படும்போது இலட்சியம் எளிதாகிறது. இந்த ஒருமையால் மனதில் ஞானம் பிறக்கிறது என்று பக்தர்களை ஞான மார்க்கத்துக்கு வழிநடத்தியிருக்கிறார்.

பக்தர்களின் வேண்டுதலை  தீர்த்து வைத்த அன்னையின் அன்பு அளப்பரியது.  வறுமையில் வாடும் பக்தை ஒருவருக்கு இளவயதில் இருதயக் கோளாறு என்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.

என் அன்னையைத் தவிர வேறு யார் காப்பார்கள் என்று தன்னுடைய  கஷ்டத்தை கூறி இடைவிடாது பிரார்த்தனை செய்தாள். அந்த ஊருக்கு வந்த மருத்துவர் சிக்கலான இருதய அறுவைசிகிச்சையையும் வெற்றிகரமாக செய்யக் கூடியவர்.  அவரே அன்னை பக்தைக்கு இலவசமாக அறுவைசிகிச்சை செய்தார். இதுபோல் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் குறையைத் தீர்த்த அன்னையின் அற்புதங் களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அன்னையை வழிபட அர்ச்சனையும், மந்திரங்களும் தேவையில்லை. அன்னையின் திருவுருவப்படத்துக்கு முன்பு  ஆற்றல் மிக்க மலர்களைச் சமர்ப்பித்து தங்கள் வேண்டுதல்களை இடைவிடாது பிரார்த்தித்தாலே போதுமானது.  

அன்னை யிடம் கோரிக்கை வைப்பவர்கள் ஆத்ம சமர்ப்பணம் என்று சொல்லும்படி பிரார்த் தனை செய்யவேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் அன்னையின் திருவுருவப் படத் துக்கு மலரை சமர்பித்து இடையூறு இல்லாமல் மனதை தியான நிலைக்கு கொண்டு வந்து  பிரச்னைகளின் வரலாறை 15 முறை  சொல்ல வேண்டும். தியானத்தின் போது இடையூறும் இருக்ககூடாது.

பிரார்த்தனைகளை  வாயால் சத்தமிட்ட படியோ மனதிற்குள்ளோ  அன்னையை நினைத்தப்படி சொல்லலாம்.  அதன் பிறகு பிரச்னையின் தீவிரம் குறையவோ.. தீர்வதற்கோ வழி தெரியும். அன்னை யின் அருளால்  எல்லாம் சுமுகமாக முடியும். அன்னையிடம் சரணடைந்தால் நமது துன்பங்கள் கறைந்து போகும். 

newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close