பகீரதன் தவம் –II 

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Feb, 2019 04:01 pm
devotional-story

பகீரதன் தவம் –II 
பகீரதன்,  தங்கள் குல குருவான வசிஷ்டரிடம் ”எங்கள் முன்னோர்கள் நரகத்தில் துன்பப்படுகிறார்கள் அவர்களைக்  காப்பாற்ற என்ன செய்வது என்று தாங்கள் தான் கூறவேண்டும்” என்று கேட்டார். ”பிரம்மனை நினைத்து தவம் செய்”  என்றார். பகீரதன் பிரம்மனை நினைத்து தவம் புரிந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன் பகீரதனுக்கு முன்பு காட்சி அளித்தார்.  பகீரதன், பிரம்மனிடம் முன்னோர்களை நரகத்தில் இருந்து விடுவிக்கும்படி வேண்டினார். 

பிரம்மாவோ.. ”உனது தவத்தால்  மகிழ்ந்தது உண்மையே... உங்கள்  முன்னோர்களின் எலும்புகளின் மீது ஆகாய கங்கை நீர்பட்டால்  நரகத்தில் வாடும் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். ஆனால் ஆகாய கங்கை எப்படி பூமிக்கு வருவாள். அவளது வேகத்தை தாங்கும் சக்தி பூலோகத்துக்கு இல்லை. நீ அவளிடம் ஆலோசனை கேளேன்”  என்றார். பகீரதன் ஆகாய கங்கையிடம் சென்று தன் துன்பத்தைக் கூறினான்.  

”உனக்கு உதவி செய்ய ஆசைதான். ஆனால் என் வேகத்தை பூமாதேவியால் தாங்க முடியாது. என்னை  தாங்கி பிடித்தபடி பூமிக்கு அழைத்துச் சென்றால் நான் வருகிறேன்” என்றாள். பகீரதன்  தேவர்களிடம் உதவி கேட்டான். ”ஆகாய கங்கையை யாவது...பிடித்து பூலோகத்தில் விடுவதாவது எங்களால் இயலாது” என்று   மகா விஷ்ணுவைக் கைகாட்டினார்கள். அவரோ  ”ஈசனை நினைத்து தவம் செய். அவர் உனக்கு அருள் புரிவார்” என்றார். மீண்டும் பகீரதனின் தவம் தொடரலாயிற்று. 

நெடுங்காலம் கழித்து  அவன் முன் தோன்றிய ஈசன் ”மகிழ்ச்சி பகீரதா... நீ கங்கையை அழைத்துவா என் சடை முடியில் வைத்து அவளை  பூலோகத்தில் இறக்கி விடுகிறேன்” என்றார். பகீரதனும் கங்கையை அழைத்து வந்தான். சிவப்பெருமானின் சடையில் அமர்ந்த கங்கையை பூலோகத்திற்கு வேகமாக பாய்ந்தாள். நம் வேகத்தை இந்த சடாமுடி தாங்கிடுமா என்ற மமதை அவளுக்கு ஏற்பட்டதும்.. சினம் கொண்ட சிவன்  கங்கையை நதிரூபத்தில் தன் சடாமுடியிலேயே சுருட்டிக்கொண்டார். வழியின்றி அடைப்பட்டாள் ஆகாய கங்கை. 

பகீரதன் நடந்ததை அறிந்து, மீண்டும்  ஒற்றைக்காலில் தவம் இருந்தான். சிவப்பெருமான் மனம் இறங்கி கங்கையை சடா முடியிலிருந்து வெளியேற்றினார். நந்தியார் கங்கையை இமயமலை வரை கொண்டு சென்று விட்டார். இமயத்திலிருந்து பாய்ந்து வந்த கங்கை,  ஜான்ஹவி என்னும்  ரிஷியின் ஆசிரமத்தை நீரால் சூறையாடி உருட்டி அவரையும் சேர்த்து தள்ளியபடி ஓடினாள். கோபம் கொண்ட ஜான்ஹவி தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக்குடித்து விட்டார். 

பின்னால் ஓடிவந்த பகீரதன் கலங்கினான். என்ன சோதனை இது என்றபடி ரிஷியிடம் வந்து, கடந்து வந்த தவத்தை எடுத்துக்கூறி கெஞ்சினான். சரி உனக்காக, அவளை வெளியேற்றுகிறேன் என்று செவி வழியே கங்கையை கொஞ் சம் கொஞ்சமாக வெளியேற்றினார். அதன் பிறகு கங்கையை கபில முனிவரிடம் அழைத்துச் சென்று ஆசிபெற்று தன்னுடைய மூதாதையர்கள் எலும்புக்கூடுகளாய் ஆன இடத்தில் கங்கையைப் பாயசெய்தான். அவ்விடத்தில் பாய்ந்த கங்கையால் அனைவருக்கும் மோட்க்ஷம் கிடைத்தது.

ஆகாய கங்கையால் பகீரதனின் முன்னோர்களுக்கு மட்டுமா மோட்க்ஷம் கிடைத்தது? நாம்  அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கி நமக்கும் அல்லவா மோட்க்ஷத்தை கொடுக்கிறது. இப்போது தெரிகிறதா.. பகீரத பிரயத்தனம் என்பது....எவ்வளவு பிரயத்தனமானதென்று...  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close