நீங்கள் திருப்தி அடையாத மனிதர்களா?  திருப்தி கொள்ளும் விலங்குகளா?

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Feb, 2019 06:49 pm
devotional-article

நீங்கள் திருப்தி அடையாத மனிதர்களா?  திருப்தி கொள்ளும் விலங்குகளா?
குருகுலத்தில் இருந்த சீடர்கள் தங்கள்  குருகுல வாசத்தை முடித்து வீடு திரும்ப தயாராகினர். மாணவர்கள் அனைவரும் சிறந்தவர்களாக இருந்தாலும் இறுதியாக ஒரு போட்டியை வைத்து அவர்களது மனநிலையை அறிந்த பிறகு வழியனுப்பவேண்டும் என்று நினைத்தார்.

குருவின் அனுமதிக்காக மாணவர்கள் வீடு திரும்ப காத்திருந்தார்கள். குருவின்  மெளனம் அவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கியது. ”குருவே  நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது  மிச்சம் ஏதுமிருக்கிறதா? அப்படி என்றால் நாங்கள்  இன்னும் சில நாள்கள் தங்கியிருந்து அவற்றையும் கற்று முடித்து  பிறகு திரும்புகிறோம்” என்றார்கள். ”நீங்கள் எல்லோருமே கல்வியில் சிறந்து விளங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது. 

ஆனாலும் இறுதியாக உங்களிடம் ஒன்றை  தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு  முன்பு உங்கள் எல்லோருக்கும் நாளை விருந்து தர விரும்புகிறேன்” என்றார். ”தாங்கள் என்ன செய்தாலும் அது எங்கள் நன்மைக்குத்தான் என்று நாங்கள் அறிவோம் குருவே.. ”என்று மாணவர்கள்  மகிழ்ச்சியுடன்  விருந்துக்கு தயாரானார்கள்.

விருந்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின. நல்ல சாப்பாடு சாப்பிடபோகிறோம் என்ற மகிழ்ச்சி மாணவர்களுக்கு இருந்தது. இலைகள் பரிமாறப்பட்டன. குருவின் முன்னிலையில்  விதவிதமான உணவுகள் ஒவ்வொரு இலையிலும் நிரப்பி வைக்கப்பட்டன. குருவின் கட்டளைக்கு காத்திருந்த மாணவர்கள் அவர் கண்ணசைக்க பந்தியில் அமர்ந்தனர்.  உணவை உண்ணும் ஆர்வத்துடன்  வேகமாக செயல்பட்ட மாணவர்களைத் தடுத்து நிறுத்தியது குருவின்  குரல்.

என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லிய பிறகு அனைவரும்  சாப்பிடலாம் என்றபடி அனைவரையும் பார்த்தார்.
உங்கள் முன் உங்களுக்கு பிடித்த உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. நீங்கள்  எப்படி சாப்பிட விரும்புகிறீர்கள்? மனிதர்கள் போலவா அல்லது விலங்குகளைப் போலவா? என்று கேட்டார். எல்லோரும் ஒரே குரலில் நாங்கள் மனிதனாகவே சாப்பிட விரும்புகிறோம் என்றார்கள். அப்படியானால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும்  நிறைய இருக்கிறது.        

உலகில்  பல்வேறு  ஜீவராசிகள்  இறைவனால் படைக்கப்பட்டுள்ளன. அவற்றிடம் இருக்கும் நல்ல குணாதிசியங்களை உயிரினங்களில்  உயர்ந்த மனித இனமும்  பின்பற்ற வேண்டிய அவசியம். நம்மிடம் இல்லாத உயர்ந்த குணம் விலங்குகளுக்கு உண்டு.  விதவிதமான உணவுகள் இருந்தாலும்  மிதமிஞ்சி எடுத்துகொள்வதை அவைகள் விரும்புவதில்லை. ஆனால் நாம்  வித விதமான உணவுகளை  எடுத்துக்கொண்டாலும்  இன்னும் கொஞ்சம்  உண்டிருக்கலாமோ.. ருசிக் கூட கொஞ்சம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடன் திருப்தி இல்லாத மனநிலையில்   தான் இருக்கிறோம்.

வாழ்வில் எதைக் கண்டாலும்  திருப்தி இல்லாத நிலையிலேயே மனிதன் வாழ்கிறான்.  அதிக செல்வம் இருந்தாலும் இன்னும்  அதிகமாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணமே அவனிடம் உள்ள செல்வத்தை அனுபவிக்காமல் செய்கிறது.  கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடையும் குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.இறைவன் எல்லோருக்கும்  எல்லாமும் கிடைக்கவே செய்கிறான்.  எப்போதும் திருப்தியான மனநிலையிலேயே இருக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

newstm.in    

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close