அற்புதம் நிகழ்த்தும் பாபா...

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Feb, 2019 11:50 am
devotional-article

அற்புதம் நிகழ்த்தும் பாபா...
பக்தி என்றால் எப்போதும் இறைவனுக்கு தொண்டு செய்தும், இறைவனை நினைத்து தியானம் செய்வதும், எப்போதும் பூஜை புனஸ்காரம் என்று இருப்பதும், தவறாமல் ஆலய வழிபாடு செய்வதும் சிறந்த பக்தி என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. குருவாக பாபாவை எண்ணிய பிறகு பக்தி என்பது உள் மனதுக்குள் ஏற்படும் அற்புதமான நம்பிக்கை மட்டுமே... என்ன செய்வேன் பாபா என்றாலே எல்லாம் நானே செய்கிறேன் என்று ஓடி வந்து துயர் துடைப்பதில் பாபாவுக்கு நிகர் யார் தான் இருக்கிறார்கள்.

மனதிற்குள்ளும், வெளிப்படையான வேண்டுதலும் மனம் உருகி செய்யும் போது இறைவன் துணை நிற்பார் என்று சொல்வார்கள். ஆனால் எவ்வித வேண்டுதல்களையும் இல்லாமலேயே வேண்டக்கூடிய சங்கதிகளை சத்தமின்றி நிறைவேற்றி நம்மை காப்பதில் பாபாவின் அருளைப் பெற என்ன தவம் செய்திருக்க வேண்டும். பக்தியோடு பாபாவை வணங்கும் ஒரு பக்தன் இருந்தான்.

பாபாவின் அறிமுகம் பெறும் போதே அவரது அருளைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றிருந்தான். ஷீரடியிலிருந்து வந்த ஒருவர் அலுவலகத்தில் அனைவருக்கும் சிறிய பாபா படத்தை எல்லோருக்கும் கொடுத்து நீங்கள் என்ன கேட்டாலும் உடனடியாக கொடுக்கும் தெய்வம் இவர்.

இல்லையென்று பதிலே இல்லாத இளகிய மனம்  படைத்தவர். இவரை வழிபடுங்கள். ஆனால்  நேர்மை தவறாத வேண்டுதல்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்றார். எல்லோரும் வெளிப் பக்தியுடன் வாங்கி பையில் போட்டுக்கொண்டனர். இவனுக்கு உள்ளே குறுகுறு வென்று இருந்தது.
 
தெய்வங்கள் எவ்வளவு அழகாக அலங்காரத்தோடு இருக்கிறது. இவர் பார்க்க மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கிறார்.  ஆனால் இவர் கண்களில் தெரியும் தீர்க்க பார்வை ஏதோ செய்கிறதே என்று அந்தப்படத்தையே சில நிமிடம் உ ற்றுப் பார்த்தான். பிறகு வேலை அழைக்கவே படத்தை  சட்டை பாக்கெட்டுக்குள் போட்டபடி வேலையில் மூழ்கினான்.

சிறிய பணியில் இருந்து வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருபவன் என்பதால் எதன் மீதும் பற்றின்றி இருந்தான்.  இருக்க ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் வரும் வருமானத்தில் உணவே பாதி நேரம் திண்டாட்டமாக இருக்கிறதே என்று நினைத்தவனுக்கு பாபாவின்  தீர்க்கமான பார்வை  கண்முன் நிறுத்தியது.

மாலையில் வீடு திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.  அவன் குடியிருக்கும் அந்த நகர் முழுக்கவிருக்கும்  குடிசைப்பகுதிகளையெல்லாம் ஒரு பெருந்தனக்காரர் ஒருவரின் செலவில் எல்லோருக்கும் சிறிய வீடு கட்டிகொடுப்பதாக அவன் மனைவி மகிழ்ச்சியுடன் கூறீனாள். 

ஆனால் அடுத்த நாள் அவனது வேலைக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் விரைவில் அவனை வேறு வேலை பார்க்க சொன்னார்கள். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  இரவு நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவித்தான். சம்பந்தமேயில்லாமல் பாபாவின்  பார்வையில் கருணை கூடியிருந்தது.

இன்றோடு கடைசி  பிறகு நீதான் பாபா வழிகாட்டவேண்டும் என்று அலுவலகத்துக்கு சென்றான். ஆனால் அவனது நேர்மையைக் காரணம் காட்டி  அவனை பணியிலிருந்து எடுக்கவில்லை என்பதை அறிந்தான். அவனது கண்களில் கண் ணீர் பெருகியது.

இப்படித்தான் பாபாவைக் காண வரும் பக்தர்கள் அனைவரும்  பெருகி வரும் கண்ணீரை பொருட்படுத்தாமல் தரிசனம் செய்கிறார்கள். பக்தர்கள்  எல்லோரின் வாழ்க்கையிலும் பாபா அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார்.  ஆனால் அனைத்துமே பாபாவுக்கும் பக்தனுக்குமானது . சாய்ராம்..

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close