உலகம் அழியுமா? ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிப்பாரா?

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Feb, 2019 12:45 pm
devotional-article

உலகம் அழியுமா? ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிப்பாரா?
இறைவனிடம் எவ்வளவு பக்தி கொண்டிருந்தாலும் விடை தெரியாத கேள்விகள் பலவும் உண்டு. உலகம் இப்படித்தான் உருவாயிற்று என்று அழுத்தம் திருத்தமாக நிச்சயித்து யாராலும் சொல்ல முடியவில்லை. புராணக்கதையிலும், இதிகாசத்திலும் படித்ததை வைத்து இப்படித்தான் உருவாகியிருக்கக் கூடும் என்னும் அனுமானத்தின் அடிப்படையில் தான் கூறி வருகிறோம். அப்படியே யுகங்கள் கடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் யுகத்துக்கு கலியுகம் என்று பெயர் கலியுகம் முடியும் போது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் மடிந்து மீண்டும் ஜீவராசிகள் உருவாகும் என்று ஆன்மிகவாதிகள் சொல்லி வருகிறார்கள்.

உலகம் அழிய போவதற்கு முன்பு  இறைவன் நமக்கு முன்கூட்டியே ஏதேனும் ஒரு  அசம்பாவிதத்தை உண்டாக்கி நமக்கு தெரியப்படுத்துவார் என்றூ மக்கள் இறைவனிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆலயம் சரிந்து விழுவதும், ஆலயத்துக்குள் விரிசலும் கூட இப்படி  உலக அழிவுக்கு அபசகுணமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஸ்ரீ  ரங்கம்  கோபுரத்தில் விரிசல் உண்டானால்  இலங்கைக்கு ஆபத்து என்றும் கூறுவதுண்டு. ஆனால் உலக அழிவை அடையாளம் காட்டவே ஒர் ஆலயம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்  ஏழாம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் கேதாரேஸ்வர் என்னும் குகைக் கோயில் உருவாக்கப்பட்டது. குகைக்குள் நீர் சூழப்பட்டுள்ளது. நான்கு தூண்களுக்கு நடுவில் நீர் சூழ ஐந்தடி உயரத்தில் சிவலிங்கம்  பிரதிஷ்டை செய்யப்பட்டது. லிங்கத்தைத் தரிசிக்க சுற்றியுள்ள குளிர்ந்த நீரில் கால் நனைத்து தான் செல்ல வேண்டும். இதுவே மிகவும் கடினமாக இருக்கும். காலப்போக்கில் சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள தூண்கள் சிதிலமடைந்து விட்டன. 

நான்கு தூண்களும் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டன. இவற்றில்  கலியுகம் என்னும் பெயரில் அழைக்கப்படும் ஒரு தூண் தவிர எஞ்சிய மூன்று தூண்களும் உருத் தெரியாமல் சிதிலமடைந்துவிட்டது. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் ஒவ்வொரு தூணாக விழுந்தது. அது போல் தற்போது எஞ்சியிருப்பது கலியுகம் மட்டுமே.  இந்த நான்காவது தூண் எப்போது சிதலமடைந்து விழுகிறதோ அப்போது உலகமும் நிச்சயம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

உலகில்  எப்போது அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் தரித்து அதர்மத்தை அழித்து உலகைக் காப்பார் என்று சொல்பவர்கள் இந்தத கேதாரேஸ்வரர் கோயிலில் உள்ள நான்காது  தூண் மொத்தமாக சிதிலமடைந்து விழும்போது ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதாரமெடுத்து உலகை காப்பார் என்றும் சொல்கிறார்கள்.  நமது முன்னோர்களின் ஆன்மிக வழிபாடு நாகரிகமும், விஞ்ஞானமும் வேகமாக வளர்ந்த நிலையிலும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருப்பதற்கு இந்தக் கோவிலும் ஒரு சான்று. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close