எமனை ஏமாற்ற முடியுமா?

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 03:20 pm
special-devotional-article

 பூலோகத்தில் ஒருவன், எமனையும் ஏமாற்றும் சாதுரியம் எனக்குண்டு என்று சொல்லியபடி பெருமை பேசி திரிந்தான். நான் கலியுகத்தில் வாழும் காலம் வரை, இருக்கும் அனைத்து சுகங்களையும் அனுபவித்த பிறகே சாவேன் என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கூறினான். 

செய்யத்தகாத காரியங்களை செய்து, அனைவரது வெறுப்புகளையும் சம்பாதித்தான். நீ என்ன வேண்டுமானாலும் சொல்...கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே, எமனின் அழைப்பிலிருந்து சில காலம் தள்ளி வைக்கலாம். உன்னையெல்லாம் கடவுள் விட்டுவைப்பாரா? உனக்கு  அற்ப ஆயுளாகத்தான் இருக்க வேண்டும் என்றும்  பேசினார்கள்.

பெற்றோர்கள் செல்வந்தர்களாக இருந்ததால், அவன் சுகபோகமாக சுற்றித் திரிந்தான். உலகில் இருக்கும் அத்தனை கெடுதல்களையும், சிறப்பாக செய்து, எண் ணற்ற பேரின் சாபங்களை பெற்றிருந்தான். மற்றவர்களை துன்புறுத்துவதிலேயே மகிழ்ச்சியைக் கொண்டிருந்தான். 

எந்நேரமும் யாரையாவது ஏய்த்தப்படி, ஏமாற்றிக்கொண்டு திரிகிறானே. இவன் பூலோகத்தில் இருப்பதை விட   மேலோகத் துக்கு செல்வது நல்லது என்று நினைத்த பெற்றோர், இப்படி ஒரு பிள்ளை  தேவையா என்று தெய்வத்திடமே சரணடைந்தார்கள். 

மனமுருக  வேண்டும்  போது தெய்வத்திடமிருந்து அசரீரி கேட்டது. உங்கள் பிள்ளைக்கு ஆயுசு அதிகம்.. அதனால் இந்த விஷயத்தில், நான் எப்படி உங்களுக்கு உதவமுடியும் என்று கேட்டது. அவன் உயிரை எடுத்துவிடு என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமையில்லாமல் இருக்கலாம். 

ஆனால், எங்கள் உயிரையாவது எடுத்துவிடு என்று அழுதார்கள். சரி, நான் எமனிடம் பேசிவிட்டு வருகிறேன், ஆனால் அற்ப ஆயுசு கொண்டவன் சாதுரியமாக செயல்பட்டால், அவனை மேலோகத்துக்கு அழைத்து செல்வது சாதாரண காரியமல்ல.. என்று சொல்லி மறைந்தது.

விஷயம் இவன் காதுகளுக்கும் வந்தது. எமன் வந்து  பாசக்கயிறை வீசும் போது, என் உயிர் போவதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுநாள் வரை நான் செய்த கொடுமைகளுக்கு பிரயாசித்தமாக, தங்களுக்கு விருந்தளிக்க விரும்புகிறேன் என்றான். 

எமனும் மனமிறங்கி சரி அப்படியே ஆகட்டும் என்று சம்மதித்தான். விருந்தில் மயக்க மருந்து கொடுத்து எமன் உறங்கும் சமயம், இவன் எமனிடமிருந்த பட்டியலில் தன் பெயரை கடைசி இடத்துக்கு மாற்றிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்தான் எமன். உன் விருந்தில் திருப்தி அடைந்ததால் உன் மீது பாசக்கயிறு வீசுவதைத் தள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறேன். இனி  யாரையும் தொல்லை செய்யாதே என்று அறிவுரை செய்தான்.  

இவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆனால்  நீங்கள் வெறுங்கையுடன் மேலோகம் திரும்ப இயலாதே என்ன செய்வீர்கள்? என்று கேட்டான். அதனாலென்ன,  என்னுடைய பட்டியலில் கீழிருந்து மேலாக இருக்கும் மானுடர்களிடம் சென்று பாசக்கயிறை வீசப்போகிறேன் என்றான். தலை கிறுகிறுத்தது இவனுக்கு...

தெய்வத்தையோ, எமனையோ யாராலும் ஏமாற்ற முடியாது என்பதை, கடைசி நேரத்தில் அவன் உணர்ந்தான். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close