பூரம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில்...!

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 09:43 pm
sri-hari-theertheswarar-temple

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஊரில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயிலே பூரம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண் டிய தலம்.

27 நட்சத்திரங்களில் 11 வது இடத்தில் பூரம் நட்சத்திரம் இருக்கிறது. பூர தீர்த்தம் என்பது அக்னி லோகத்தில் உள்ள  புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர மண்டலத் தில் சிவதீர்த்தம், நாகதீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குருதீர்த்தம் போன்ற ஏழு தீர்த்தங்களும்  ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ் வரர் தலத்தில் இருப்பதால் இது பூர நட்சத்திரக்காரர்களுக்கு உரியதாயிற்று.

சோழமன்னனான கல்மாஷபாதன் சிறந்த சிவபக்தன். குழந்தைப்பேறு இன்மையால் தனக்கு பிறகு சிவனுக்கு சேவை செய்ய தனக்கு குழந்தைப்பேறு வேண்டும் என்று வருந்தி அகத்திய முனிவரிடம் சென்றான். திருவரங்குளம் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்தை வழிபடு என்றார் அகத்தியர்.  திருவரங் குளம் வந்து சிவலிங்கத்தைத் தேடினான் மன்னன். அப்போது பசுமேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பூஜை பொருள்கள் தவறி விழுவதாக கூறினார்கள். கல்மாஷ பாதன் அந்த இடத்தைத் தோண்டி பார்த்தான். லிங்கத்தின் மேல் பகுதியிலிருந்து இரத்தம் பீய்ச்சி அடித்தது.சிவனது தலையை சீவி விட்டோமே என்று வருந்திய மன்னன் தனக்குத்தானே தண்டனை கொடுக் கும் வகையில் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினான். சிவன் பார்வதியுடன் திருமணக்கோலத்தில் காட்சி அளித்து இந்த இடத்தில் தனக்கு கோயில் எழுப்பும் படி கூறினார். சிறப்பாக கோயில் கட்டிய மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது நடந்தது பூர நட்சத்திர தினத்தன்று என்பதால் பூர நட்சத்திரக்காரர்கள் இத் தலத்தில் வந்து வழிபட்டு தோஷங்கள் நிவர்த்தி அடையலாம்.

மூலவர் திருவரங்குளநாதர் என்னும் ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர். இவர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.  நாயகி பெரிய நாயகி என்னும்  பிரஹன்நாயகி. நான்கு திருக்கரங்களுடன்  தெற்கு நோக்கி நின்ற கோலத்தில்  அருள் புரிகிறாள். இறைவனது மூலஸ்தானத்துக்கு பின்பு வள்ளி தெய்வானை சமேதெ முருகப்பெருமான் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். கோயில் பிரகாரத் தில்   பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர்,சதுர்த்தி விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நந்தி, துர்க்கை,  பிரம்மா,சண்டிகேஸ்வரர், நாயன்மார்கள், சப்த மாதர்கள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, ஜேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சந்திரன், நடராஜன் சன்னிதிகளும்   அமைந் துள்ளன.

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது, வருடத்துக்கு ஒருமுறை அல்லது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீ தீர்த்தேஸ் வரரை வழிபட்டு தோஷங்களை நிவர்த்தி செய்து வளமான வாழ்க்கையை வேண்டி பெறலாம்.  குழந்தைப் பேறு,  கிரகதோஷம், நாகதோஷத்தால் பாதிக் கப்பட்டவர்கள் அம்மனிடம் உள்ள  ஸ்ரீ சக்கரத்தை நினைத்து வழிபட்டால்  சங்கடங்கள் விலகி வாழ்வில் சந்தோஷம் மலர்ந்திடும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close