23-4-2018 தினப்பலன் - பஞ்சாங்கம்

  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   | Last Modified : 23 Apr, 2018 12:01 am

இன்றைய பஞ்சாங்கம்

விளம்பி வருஷம் I சித்திரை 10 I இங்கிலீஷ்: 23 April 2018
உத்தராயணம் I வஸந்தருது I திங்கள்கிழமை
ராகு காலம்: காலை 7.30 - 9.00 I எமகண்டம்: காலை 10.30 - 12.00 I குளிகை: மதியம் 1.30 - 3.00 I சூலம்: கிழக்கு I பரிகாரம்: தயிர்
இன்று மேல் நோக்கு நாள். I மதுரை மீனாட்சி சுந்தரேசுவராள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. I வாஸ்து செய்ய நன்று.
திதி: அஷ்டமி I சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

தினபலன் - 23.04.2018 திங்கட்கிழமை... இன்றைய ராசி பலனைக் கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்!

இன்றைய கிரக நிலை: br>மேஷ ராசியில் சூரியன் - ரிஷப ராசியில் சுக்கிரன் - கடக ராசியில் சந்திரன், ராகு - துலா ராசியில் குரு (வ) - தனுசு ராசியில் செவ்வாய், சனி - மகர ராசியில் கேது - மீன ராசியில் புதன் என கிரகங்களுடைய சஞ்சாரம் அமைந்திருக்கிறது.

மேஷம்:

கிரகநிலை:
ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - சுகஸ்தானத்தில் சந்திரன், ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கியஸ்தானத்தில் செவ்வாய், சனி - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றும் மேஷராசியினரே, நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பவர். இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:

கிரகநிலை:
ராசியில் சுக்கிரன் - தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், சனி - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்தும் ரிஷபராசியினரே, இன்று வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்னைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்:

கிரகநிலை:
வாக்கு ஸ்தானத்தில் சந்திரன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு (வ) - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன் - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படும் மிதுனராசியினரே, இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். உங்கள் குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்:

கிரகநிலை:
ராசியில் சந்திரன், ராகு - சுக ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சனி - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணமுடைய கடகராசியினரே நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். இன்று எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். நிகழ்காலத்தில் இருக்க பழகிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்:

கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சந்திரன், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்மராசியினரே இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். அதிலும் குறிப்பாக சிம்மராசி உள்ள அரசியல்வாதிகளுக்கு இன்று தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி:

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் கன்னி ராசியினரே, நீங்கள் உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ்பவர். இன்று கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம். உறுதியான, நேர்மையான எண்ணத்துடன் பணியாற்றுவீர்கள். இதனால், பாதகம் ஏற்படுவதில் இருந்து தப்பிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்:

கிரகநிலை:
ராசியில் ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - சப்தம ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆலோசனை கூற தயங்காத துலா ராசியினரே நீங்கள் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். இன்று சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்:

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளக் கூடிய விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுப்பீர்கள். இன்று வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு:

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், ராகு - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
எப்போதும் உற்சாகமாக இருக்கும், உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பும் தனுசு ராசியினரே இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சந்திரன், ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதை நிதானமாக செய்து வெற்றி பெறும் மகர ராசியினரே, இன்று குடும்பத்தில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் வந்தால் அதனைப் பெரிதாக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இது. அப்படி கவனத்துடன் செயல்பட்டால் வெற்றிபெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
பலன்:
எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கும்ப ராசியினரே இன்று கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்னைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

கிரகநிலை:
ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சனி - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்:
எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுக்க தெரிந்த மீனராசியினரே, இன்று சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். இதுவே அதற்கு ஏற்ற காலமாகும். புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது நலம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close