அம்மனுக்கு ஆடி கூழும்...அறிவியல் காரணங்களும்

  தனலக்ஷ்மி   | Last Modified : 22 Jul, 2019 12:06 pm
special-article-about-aadi-kool

ஆடி அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வார்க்க வேண்டும் என்று முன்னோர்கள் பழக்கியதெல்லாம் ஆன்மிகத்தை தாண் டிய அறிவியலும் கூட..

ஆடி மாதம் தொடக்கத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கிறது.அப்போது வெளிப்படும்.சூரியக் கதிர்கள் விவசாயத்துக்கு நன்மை தரும். அதனால் தான் ஆடி பட்டம் தேடி விதை என்றார்கள். சூரியனிடமி ருந்து வெளிப்படும் சூட்சும சக்திகள் பிராணவாயுவை அதிகரிக் கும். சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் இக்காலத்தில் சந்திரன் சூரியனைக் குளிர்விக்கிறது. இதனால் பகல் பொழுது குறைந்தும் இரவு நீண்டும் இருக்கும். 

சந்திரனின் குளிர்ச்சியால் பூமியும் குளிர்ந்து காற்றும், மழையும், ஈரப்பசையும் கொண்டு இருக்கும்.இக்காலங்களில் கிருமிகளின் தாக்கம் அதிக மாகி எண்ணிக்கையைப் பெருக்கும்.நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு கொண்டவர்கள் எளிதில் சளி, இருமல்,காய்ச்சல்தொற்றுக்களால் அவதியுறு வார்கள்.குறிப்பாக அம்மை நோய் தாக்கக்கூடிய காலம் இது.

சூரியனின் கதிர் வீச்சால் உடலில் சூடு அதிகரித்து வைரஸ் கிருமிகளால் அம்மை நோய் அதிகரிக்கும்.காற்றில் இருக்கும் ஈரப்பதம் இந்தக் கிரு மியை வேகமாக பரப்பி அம்மை நோயை உண்டாக்குகிறது. வருமுன் காப்போம் என்று ஆரோக்யம் குறையாமல் வாழ்ந்த முன்னோர்கள் முன் எச்சரிக்கையாக அம்மையை  வரவிடாமல் தடுத்தார்கள்.   

அம்மை நோயை அண்டவிடாமல் தடுக்கும் உணவு பொருளில் சிறந்தது கூழ். அதனால் தான் ஆடிக்கு அம்மனுக்கு கூழ்படைக்கும் சடங்கை உரு வாக்கினார்கள். கேழ்வரகு கூழில் ஈஸ்ட் என்னும் நுண்ணுயிர் அதிகமாக இருக்கிறது. அதனோடு சேர்த்து படைக்கப்படும் முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவையும் அதிகமாக காணப்படுகிறது.

உள்ளுக்கு இத்தகைய சத்துக்களைக் கொடுக்கும் போது வெளியிலிருந்து தொற்றும் கிருமிகளைகத் தடுக்க வேப்பிலையும், மஞ்சளையும் கிருமி நாசினியாக பயன்படுத்தினார்கள். வீடு முழுக்க வேப்பிலை தோரணங்கள், வாசலில் கொத்து கொத்தாய் அலங்கரித்து வழிபாடுகள் நடக்கும். இப் படிமுன்னோர்களின் ஒவ்வொரு பழக்கத்திலும் ஒரு அறிவியல் இருந்தது. இப்போது அம்மை நோய்க்கான விழிப்புணர்வு அதிகரித்து முன் கூட் டியே தடுப்பூசிகள் போடப்பட்டாலும் முன்னோர்கள் காலத்தில் அதீத வெப்பத்தையும் காற்று வறட்சியையும் எதிர்கொள்ள முடியாமல் அம்மை கண்டு சிலர் இறப்பதும் பரவலாக இருந்தது. அதற்கு உரிய மருத்துவமாக ஆன்மிகம் என்னும் சடங்கில் தான் அம்மனுக்கு ஆன்மிக கூழ் என்ற முறையைக் கொண்டுவந்தார்கள் முன்னோர்கள்.

இன்றுதான் விஞ்ஞானம் பெருகிவிட்டதே. மருத்துவம் வளர்ந்துவிட்டதே. தடுப்பூசிகளை முன்கூட்டியே போடுகிறோமே என்று கேட்கலாம். எத் த னை இருந்தாலும் இயற்கையாக கிடைக்கும் இயற்கை அளிக்கும் தானியங்கள் சத்தும், கிருமிகளை இயல்பாகவே தடுத்து நிறுத்தும் வேப்பி லைக்கு முன்பும் செயற்கை செயற்கைதான். அதனால் நாமும் ஆடிக்கூழ் வார்ப்போம், ஆடி கூழ் எங்கு ஊற்றினாலும் தேடிச்சென்று வாங்கி குடிப் போம். சடங்கு சம்பிரதாயத்துக்காகவும் ஆரோக்யத்துக்காகவும்…

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close