குருவருள் பெற்றுத்தரும் வியாழக்கிழமை வழிபாடு !

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2019 10:24 pm
how-about-today

இன்று 29.08.2019 வியாழக்கிழமை ஆவணி மாதம் 12ம் நாள். சதுர்த்தசி திதி.

சித்த யோகமும், அமிர்த யோகமும் கூடிய நன்னாள். இன்று போதாயன அமாவாஸ்யை.  நாளைய தினம் பொது அமாவாஸ்யை. பெரும்பாலானோர் நாளைய தினமே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். 

இன்று ஆயில்ய நட்சத்திரம். வியாழக்கிழமை என்பதால், குருவுக்கு உகந்த நாள். சிவன் கோவில்களில் தட்சணாமூர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறும். நவ கிரஹங்களில் குரு அதாவது வியாழன் கிரகத்திற்கு மஞ்சள் உடை சாற்றி, கொண்டைக்கடலை மாலை மற்றும் சர்க்கரை பொங்கல் நெய்வேத்யம் செய்தால் குருவின் அருட்பார்வை கிடைக்கும் என்பது ஐதீகம். 

ஸ்ரீ ராகவேந்திரர்,ரமணமஹர்ஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள், யோகிராம்சுரத்குமார், மஹா பெரியவா எனப்படும் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் உள்ளிட்ட மஹான்களை இன்றைய தினம் வணங்குவது குருவருளை அதிகரிக்கும். அவரவர் குலா தெய்வத்துடன், தாங்கள் குருவாக ஏற்ற மஹான்களை எண்ணி சிறிது நேரம்  த்யானத்தில் அமர்வது சிறப்பு.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close