மனம், உடலை தூய்மை ஆக்கும் ஏகாதசி விரதமும் அதன் பலன்களும்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 04 Sep, 2019 09:26 pm
specialities-of-ekadasi-viratham

மனித உடலும் ஓர் எந்திரம் தான். தொடர்ந்து ஓய்வின்றி உழைக்கும் நம் உடலுக்கும் அவ்வப்போது சற்று ஓய்வு தேவை. அப்போதுதான் அது எவ்வித தொந்தரவையும் நமக்கு தராது. 
தினமும் தூங்கி எழுவதும், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓய்வு எடுப்பதும், நம் வெளி உறுப்புகளுக்கு தரும் ஓய்வாகவே கருதப்படுகிறது. 

நாம் தினசரி உண்ணும் உணவை அரைத்து, அதை கூழாக்கி, அதில் உள்ள சத்துக்களை கிரகித்து, நம் உடலின் பிற பாகங்களுக்கு அனுப்பி வைக்கும் உள் உறுப்புகளுக்கு நாம் ஓய்வே கொடுப்பதில்லை. இதைப்பற்றி நாம் சிந்திப்பதும் இல்லை. 

நம் உள்  உறுப்புகளுக்கு அவ்வப்போது ஓய்வளிப்பதோடு, அத்துடன் ஆன்மிகத்தையும் கலந்து, நம் மனதையும் சாந்தப்படுத்தும் வழிமுறையை, விரதங்கள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அத்தகைய விரதங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஏகாதசி விரதம். 
மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாளன்று விரதம் இருந்து, இறை சிந்தனையுடன் கழித்தால், உடலும், மனமும் தூய்மை அடையும். 

ஏகாதசி விரதத்தை எப்படி துவங்குவது, அதன் சிறப்பு போன்றவற்றை காணலாம். 

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி, 'வைகுண்ட ஏகாதசி' என சிறப்பு பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து, தொடர்ந்து வரும் ஏகாதசி  நாட்களில் விரதம் இருந்தால், நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. .

* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி ஏகாதசி"" எனப்படும்.  இந்த  நாளில் விரதம் இருந்தால், பகையை வெல்ல முடியும்.

* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா"" எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம், புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும்.

* தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா"" எனப்படும். இன்று விரதம் இருந்தால், இல்லறம் இனிக்கும்.

* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா"" எனப்படும்.  இந்நாளில் விரதம் இருந்தால், மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா"" எனப்படும். இன்று விரதம் இருந்தால், பிரம்மஹஸ்தி தோஷம் அதாவது மனநோய் நீங்கும்.

* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா"" எனப்படும். இந்த நாளில் விரதமர் இருந்தால், கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம்.

* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ"" எனப்படும். இன்று விரதம் இரந்தால், ஆயிரம் பசுக்களை தானம் செய்த  பலனும் கிடைக்கும்.

* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா"" எனப்படும். இன்று விரதமிருந்தால், திருமணம்  நிச்சயமாகும்.

* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா"" எனப்படும். இந்த நாளில் விரதம் இருந்தால்,  பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.

* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ"" எனப்படும். இந்த நாளில் விரதமர் இருந்தால்,  உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். 

* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ"" எனப்படும். இந்த நாளில் விரதம் இருந்தால்,  உடல் ஆரோக்கியம் தரும். .

* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா"" என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. விரதம் இருந்தால், வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். 

* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா"" எனப்பெயர்படும். இன்று விரதமர் இருந்தால், ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் கிடைக்கும்.

* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி"" எனப்படும். இன்று விரதம் இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்.

* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி"" என்று பெயர். இன்று விரதம் இருந்தால்,  கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா"" என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும். இன்று விரதம் இருப்பது சிறப்பு. 

* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா"" எனப்படும்.  இன்று விரதம் இருந்தாலும், வீட்டில் மஹாலட்சுமி நிரந்தரமாக வாசம்  செய்வாள். 

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா"" எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.

* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா"" என்று பெயர்.  இந்நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். 

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா"" எனப்படும். விரதம் இருந்தால்,  வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும்.

* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா"" எனப் பெயர் இன்று விரதம் இருந்தால், பித்ருக்கள் ஆசி கிடைக்கும். 
* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ"" என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று விரதம் இருந்தால், வாழ்க்கையில்  எல்லா மங்களுமும் கிடைக்கும்.

* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா"" என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.

* வருடத்தில் கூடுதலாக வரும் 25வது ஏகாதசி "கமலா"" எனப்படும். இந்த நாளில் விரதம் இருந்தால், வீட்டில் செல்வம் குறையாது என்பது ஐதீகம். மாதம் இருமுறை ஏகாதசி விரதம் இருந்து, உடலும், மனமும் தூய்மை செய்வதின் மூலம்  மருத்துவரிடம் செல்வதை தவிர்ப்போம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close