இந்த நாளில் கருடனை தரிசித்தால் வேண்டும் குழந்தை பிறக்கும்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 10 Sep, 2019 09:44 pm
you-can-get-a-child-of-your-choice-if-you-see-the-garuda-in-this-days

மஹாவிஷணுவின் வாகனமான கருடனை தரிசனம் செய்வது பெரும் புண்ணியம். கருடனை தரிசனம் செய்தால், நம்மை பிடித்த  தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

எந்த திதியன்று, கருட தரிசனம் செய்கிறோமோ, அந்தத் திதியின் அதிதேவதையின் அருளாசியும், சுபிட்சங்களும் நமக்கு கிடைக்கும். 
கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும், வளர்பிறை பிரதமையன்று கருட தரிசனம்  செய்ய வேண்டும். 

குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை பிரதமை அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். 

சந்திர தோஷங்கள் விலக, வளர்பிறை திரிதியை அன்று, கருட தரிசனம் செய்ய வேண்டும்.

விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க ‘வளர்பிறை சதுர்த்தி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

கருட பகவானுக்கு உரிய திதி பஞ்சமி ஆகும். எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு. பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.

செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக ,வளர்பிறை சஷ்டி அன்று  தரிசனம் செய்ய வேண்டும்.
சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை சப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
அஷ்ட ஐஸ்வர்யங்கள், லட்சுமி கடாட்சம் உண்டாக, வளர்பிறை அஷ்டமி திதி அன்று  தரிசனம் செய்ய வேண்டும். 

கல்வி,ஞானம், அறிவு, படிப்பில் நல்ல உயர்வு, வெற்றி கிடைக்க, வளர்பிறை நவமியில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.
மரண பயம் விலக, தேய்பிறை நவமி’அன்று கருட தரிசனம் செய்யவும்.
புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும்,தேய்பிறை தசமி திதியில்  கருட தரிசனம் செய்ய வேண்டும்.

கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை ஏகாதசி அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.
புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும். வளர்பிறை துவாதசி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் துவாதசி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று , பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்வது 

சிறப்பு.. 
ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.
பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.
பிறந்தநாளன்றும், தங்களின் நட்சத்திரம் வரும் நாளிலும், கருட தரசினம் செய்வது பெரும் பலனை தரும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close