காகத்திற்கு அன்னம் வைக்கும் முன் இவர்களை வணங்கினால் உத்தமம்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 11 Sep, 2019 11:02 pm
mantra-for-food-feeding-for-kakai

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், கடவுள் நிச்சயம் படியளப்பார். அது ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு வகையில் நடைபெறும். அந்த வகையில் மனிதனாக பிறந்துள்ள நாம், இறைவனின் திருவுளப்படி, நம்மால் இயன்ற வரை பிற ஜீவ ராசிகளுக்கு, உணவளிக்க வேண்டும்.

குறைந்த பட்சம், காக்கைக்காவது உணவு படைத்தால் அதன் மூலம் நம் முன்னோர்களளுக்கே பாடியளந்ததற்கு சமம் என கருதப்படுகிறது. அவ்வாறு காகங்களுக்கு உணவளிக்கும் முன், இந்த ஸ்லோகங்களை சொல்லி அதை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என, ரிஷி, முனிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

அதன்படி, தினமும் சாப்பிடும் முன்பு, காகத்துக்கு அன்னம்  வைப்பது சிறப்பானது.  காகத்திற்கு அன்னம் வைக்கும் முன்பு சொல்ல வேண்டிய  துதி. 

'பலிர் விபீஷணே பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜூன
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா'
என்று பிரார்த்தனை செய்து சாதம் வைக்க வேண்டும். 
இதை சமஸ்க்ருதத்தில் சொல்ல சிரமமாக இருந்தால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு, அதை நினைத்து கடவுளை வணங்கினாலே, முழு பலனை பெறலாம். 

அதாவது, 'மகாபலி, விபீஷணர், பீஷ்மர், கபிலர்,  நாரதர், அர்ஜூனர் முதலான விஷ்ணு பக்தர்கள், இந்த மஹாவிஷ்ணு ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும்' என்று சொல்லி, அன்னம் வைக்கவும்.

அல்லது
'பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவ'

என்று ப்ரார்த்தனை செய்து அன்னம் வைக்கவும்.

அதாவது, 'பாணாசுரன், ராவணன், சண்டிகேஸ்வர,ர் நந்திகேஸ்வரர், ப்ருங்கி முனிவர் முதலான சிவ பக்தர்கள், இந்த மகாதேவ ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும்' என்று சொல்லி அன்னம் வைத்தால் மேற்சொன்னவர்களே, காக்கை வடிவில் வந்து அந்த பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close