இருந்தும் பயன்படாத ஏழு விஷயங்கள் இவை!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 11 Sep, 2019 11:01 pm
useless-7-things-in-this-world

மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும், சில இருந்தும் பயனற்றவையாகவே கருதப்படுகிறது.  

வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ, பெற்றோருக்கு உதவாத மகன்;

நல்ல பசி வேளையில், உண்ண முடியாதிருக்கும் உணவு;

கடும் தாகத்தை தீர்க்க இயலாத தண்ணீர்;

கணவனின்,வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி;

கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசன், ஆட்சியாளர்கள்;

பாடம் போதித்த ஆசிரியரின்,உபதேச வழி நிற்காத சீடன்;
 
நீராட வருபவனின் பாவம் தீர, குளிக்க இயலாத நிலையில், பாசி படிந்து கிடக்கும் திருக்குளம்.

இவை ஏழும் இருந்தும் பயனற்றவை என முன்னோர்களும், பழம்பெரும் அற நூல்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close