எக்காரணம் கொண்டும் இதை செய்யவே செய்யாதீங்க!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 14 Sep, 2019 10:54 pm
please-dont-do-this


நம் அன்றாட வாழ்வில் நாம் தினமும் எதை செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என நம் முன்னோர்கள் நமக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவற்றுள் சில: 

சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில், இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது. 

குடும்பஸ்தன், ஒரு ஆடை மட்டும் அணிந்து, உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி, சாப்பிடக் கூடாது. 

துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில், மலஜலம் கழிக்கக் கூடாது.

கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது.

மழை பெய்யும் போது, ஓடக் கூடாது. தண்ணீரில், தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

திருமணம் ஆகாமலே, ஒரு பெண்ணுடன் வாழ்பவனை, சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

இப்படி இன்னும் பல விஷயங்களை நம் முன்னோர்கள் நமக்கு கூறி சென்றுள்ளனர். அவர்கள் கூறியதில் பலவற்றிற்கு இன்று காரணம் தெரியாமல் போகலாம். ஆனால் அவற்றில் மனித வாழ்க்கைக்கு தேவையான அறிவியல் பூர்வமான பல நன்மைகள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close