மறதியை போக்கி அதிக மதிப்பெண் எடுக்க வைக்கும் மந்திரம்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 15 Sep, 2019 04:45 pm
how-to-get-more-marks-in-exam


சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக்கணக்காய் படித்தாலும், பாடங்கள் புரியாமலும் சிரமப்படுவர். சிலர் விளையாட்டு புத்தியால், படிப்பில் கவனமில்லாமல் இருப்பர். இன்னும் சிலர், வீட்டில் நன்றாகப் படிப்பர். ஆனால், தேர்வு அறைக்கு போனதும், பதட்டத்தில் படித்ததை மறந்து விடுவர். 

இப்படி எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை அருள லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவி செய்யும். குதிரை முகத்தோடு இருக்கும் இப்பெருமானை வழிபட்டே, சரஸ்வதியே அனைத்து வித்தைகளையும் கற்றதாகச் சொல்வர். 

காலை, மாலை நேரத்தில் வீட்டில் படிக்கத் தொடங்கும் முன், 
"ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!'' 
என்ற ஸ்லோகத்தை சொல்லிய பிறகு. படிக்கத் தொடங்கச் சொல்லுங்கள். 

கல்விக்குரிய புதன் கிழமையில், பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள். நிச்சயம் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படத் தொடங்கும்.அவர்களின், சோம்பல், மறதி காணாமல் போய், படிப்பில் சுட்டி என்ற பெயர் எடுக்க வைக்கும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close