கணவன், மனைவியிடையே மனக்கசப்பு நீங்க இதை மட்டும் செய்தால் போதும்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 15 Sep, 2019 06:11 pm
useful-parikaram-for-husband-and-wife

கணவனும்,  மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், அதைப்போல ஆனந்தம் வேறில்லை. அதே நேரம், வெறுப்பு வளர்ந்து விட்டால், நிலைமை தலைகீழாகிவிடும்.

சில நேரங்களில், விவாகரத்து வரை போய் விடுகிறது. இந்த நேரத்தில், மற்றவர்களின் யோசனையைக் கேட்டு, மனதைக் குழப்புவதை தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே.

பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று அமைதியாக இறைவனை சரணடைவது ஒன்று தான் இதற்கு எளிய வழி. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை சிவபெருமானே நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆண் பாதி பெண் பாதியாக இருக்கும் "அர்த்தநாரீஸ்வரர்' கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபடுங்கள். 

பவுர்ணமி நாளில் விரதமிருந்து மாலையில் அர்த்தநாரீஸ்வரருக்கு பால்நிவேதனம் செய்து பருகி வாருங்கள். 
அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி இல்லாத ஊர்களில், சிவாலயத்துக்கு சென்று,

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' 
என்ற தேவாரப்பாடலை மூன்று முறை சொல்லுங்கள்.  வாழ்க்கையில் வசந்தம் மலரும். மனக்கசப்புகள் நீங்கி இல்லறம் நல்லறமாகும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close