புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 16 Sep, 2019 11:02 pm
no-nonveg-in-purattasi-what-is-the-reason

புரட்டாசி மாதத்தில், வெயிலும், காற்றும் குறைந்து, மழை ஆரம்பிக்கும். ஆனால், பூமி குளிர, மழை பெய்யாது.  பல  மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இது, சூட்டை கிளப்பிவிடும்.

இது வெயில் கால வெப்பத்தை விட, கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது, உடல் சூட்டை அதிகப்படுத்தி, உடல் நலத்தை பாதிக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான், புரட்டாசி மாதத்தில், அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி, சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் நோய் கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி, இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே, புரட்டாசியில் விரதம் இருந்து, பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். அங்கு தரப்படும் துளசி கலந்த தீர்த்தத்தை குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று, தோற்று நோய் தாக்கத்திலிருந்து தப்பலாம். 

நமது முன்னோர்கள் கடைபிடித்த அனைத்து ஆன்மிக பழக்க வழக்கங்களிலும் ஓர் அறிவியல் காரணம் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close