மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா? 

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 07:03 pm
can-ladies-chant-gods-name-in-periods

வயது வந்த சிறுமியர் முதல் இறுதி மாதவிலக்கு நிற்காத மாதர் வரை, மாதம் ஒரு முறை மாதவிலக்கை சந்திக்கின்றனர். ஹிந்து மத வழக்கப்படி, பொதுவாக, மாதவிலக்கு நாட்களில், பெண்கள் கோவிலுக்கு செல்வதில்லை. தவிர, அந்த நாட்களில் வீட்டிலும், பூஜை அறைக்கு செல்வதை தவிர்த்துவிடுவர். 

இயற்கையிலேயே, ஆண்களை விட பெண்கள் பல்வேறு இயற்கை உபாதைகளுக்கு ஆளாவதாலும், நேரம் காலம் பார்க்காமல் குடும்ப உறுப்பினர்களுக்காக உழைக்கும் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதாலுமே, மாத விலக்கு நாட்களில் அவர்களுக்கு முக்கிய வேலைகள் அளிக்காமல், ஓய்வு தரப்படுகிறது. 

மருத்துவ அறிவியல் ரீதியாகவும், இந்த நாட்களில், பெண்கள் இயல்பை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உடல் ரீதியான மாற்றங்களால் உடலளவில் சோர்ந்து காணப்படும் அவர்கள், இந்நாட்களில் மனதளவிலும் தளர்ச்சி அடைகின்றனர். 

ஆன்மிக ரீதியில், பெண்களின் மாத விலக்கு நாட்களில் அவர்களுக்கு தரப்படும் ஓய்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. நம் முன்னோர்கள் கடைபிடித்த பல நல்ல பழக்க வழக்கங்களை காரண காரியம் ஆராயாமல் இன்றும் நாம் கடைபிடித்து வருகிறோம்.

அது போலத்தான், மாதவிலக்கு நாட்களில் கோவிலுக்கு செல்வதை தவிர்ப்பதும், அவர்கள், வீட்டில் பூஜை அறைக்கு செல்லாதிருத்தலும் கடைபிடிப்பது நல்லது. அதில் ஆயிரம் அறிவியல் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன. 

இந்நிலையில், இந்த நாட்களில் பெண்கள் வெறுமையை உணராமல் இருக்கவும், மனதில் உண்டாகும் இறுக்கத்தை தளர்த்திக்கொள்ளவும், ராம நாமம் சொல்லலாம். இந்நாட்களில், பூஜை அறைக்கு செல்லவே அனுமதி இல்லாத பொது, கடவுள் நாமத்தை சொல்லலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். 

ஆம், ராம நாமத்தை சொல்ல எந்த நியதியும் இல்லை என புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. காசியில் விஸ்வநாதராய் வீற்றிருக்கும் சிவபெருமான், அங்கு மரணம் அடைந்தவர்களின் காதுகளில் ராம நாமத்தை ஓதி, அந்த ஆத்மாவிற்கு முக்தி அளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

இடுகாட்டில் வீற்றிருக்கும் ஈசனே, அங்குள்ள ஆத்மாக்களுக்கு ராம நாமம் சொல்லித்தான் முக்தி அளிக்கிறார் என்றால், பெண்கள் அன்றாட சந்திக்கும் மாத விலக்கு காலங்களில் ராம நாமம் சொல்வதால் எந்த தோஷமும் நேர்ந்து விடாது என்பதே முன்னோர் வாக்கு. 

மேலும், மனா ரீதியாக மிகவும் சோந்திருக்கும் பெண்கள் அந்த நேரத்தில் ராம நாமம் சொல்வதால் மனதளவில் புது உற்சாகம் பெறுவர். தங்குக்குண்டான உடல் ரீதியான துன்பத்தை மறக்க இது உதவும். மேலும், பெண்களின் மத விலக்கு காலங்களில், துஷ்ட சக்திகள் பெண்களை சுற்றி வரும். அதன் தாக்கத்திலிருந்து தப்ப இந்த ராம நாம ஜெபம் பலனளிக்கும்.

ராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ  அங்கெல்லாம் அனுமன் தோன்றிவிடுவார். இதனால் ராம நாமம் ஜெபிப்போருக்கு அவர் காவலாக இருந்து, தீய சக்திகளிடமிருந்து காப்பார். கோவிலுக்கும் செல்லாமல், பூஜையும் செய்யாமல் இறையருளை பரிபூரணமாக பெற அந்த நாட்களில் ராம நாமம் சொல்லி  பெண்கள் பலன் அடையலாம்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close