3-5-2018 வியாழக்கிழமை... தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்!

  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்   | Last Modified : 03 May, 2018 12:08 am

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன்கள் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்...

விளம்பி வருஷம் I உத்தராயணம் I வஸந்தருது
சித்திரை 20 I இங்கிலீஷ்: 03 May 2018 I வியாழக்கிழமை
திரிதியை காலை 9.38 மணி வரை. பின் சதுர்த்தி I கேட்டை இரவு 8.15 மணி வரை. பின் மூலம்
பரிகம் நாமயோகம் I பத்ரை கரணம் I சித்த யோகம்
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00 I எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30 I சூலம்: தெற்கு I பரிகாரம்: நல்லெண்ணெய்
இன்று சமநோக்கு நாள் I சங்கடஹர சதுர்த்தி I திதி: சதுர்த்தி I சந்திராஷ்டமம்: பரணி, கிருத்திகை

மேஷம்

ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகும் மேஷராசியினரே, இன்று வருமானம் நல்லபடி இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும். குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்

அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் ரிஷப ராசியினரே, இன்று புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மிதுனம்

உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்தும் மிதுன ராசியினரே, இன்று ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகிறது.கண்ட நேரங்களில், கண்ட இடத்தில் உண்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பச் சூழ்நிலை மனதிற்கு நிம்மதி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கடகம்

தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் கடக ராசியினரே இன்று எழுதும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். இது நாள் வரை சரியான வேலை கிடைக்க வில்லையே என வருந்தி வந்தவர்களுக்கு அந்நிலை மாறி நல்ல வேலை கிடைக்கும். சிலர் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

சிம்மம்

சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப் படும் உயர்ந்த குணமுடைய சிம்மராசியினரே, இன்று குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் முடித்துக் கொடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி

மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் குணமுடைய கன்னிராசியினரே, இன்று அதிர்ஷ்டமான நாள். திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிலர் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்

வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் குணமுடைய துலா ராசியினரே, இன்று முக்கிய முடிவுகளில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இரண்டு நாட்கள் முடிவுகளை தள்ளிப் போடுங்கள். அலைச்சல் அதிகம் இருப்பினும் தக்க சமயத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அல்சர் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்

எப்போதும் பரபரப்பாக காணப்படும் விருச்சிக ராசியினரே இன்று சிலருக்கு எதிர்பார்த்திருந்த வேலை இடமாற்றம் பற்றி நற்செய்திகள் வரலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மையாகவே அமையும். உடன்பணிபுரிபவர்கள் உங்கள் மீது பொறாமை பட நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

தனுசு

எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய தனுசு ராசியினரே இன்று சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். நல்லதொரு நற்பணிகளில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்

மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைக்கும் மகர ராசியினரே, இன்று அலுவலக விசயத்தில் கவனம் தேவை. உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். பணம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கும்பம்

தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடும் கும்பராசியினரே, இன்று சிறு தொழில், வாணிபம் செய்பவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது அவசியமாகிறது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்

ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடை களை சந்திக்கும் மீனராசியினரே, இன்று குடும்பத்திற்குத் தேவையான பொருள் ஒன்றை வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைப் பணம் வரவேணிடி இருந்தால் இப்போது கைக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close