துறவிகளுக்கான மஹாளயம் எது தெரியுமா?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 24 Sep, 2019 11:10 pm
mahalayam-for-saints

முறையாக துறவறம் ஏற்று, ஆத்த விசாரம் செய்து, சித்தி அடைந்தவர்களும்,  சில காலம், பித்ரு லோகத்தில் வசிப்பார்கள். அதனால், அவர்களுக்கும் மஹாளய பட்ச காலத்தில், முன்னோருக்கு செய்வது போல், திதி கொடுக்க வேண்டும். துறவிகளின் பூர்வாசிரம குடும்பத்தை சேர்ந்தவர்கள், சீடர்கள் செய்ய வேண்டும்.

ஆனால், மற்றவர்களுக்கு திதி கொடுக்கும் நாளில், துறவிகளுக்கு திதி கொடுக்க கூடாது. மஹாளய பட்சத்தின், 12 நாளான துவாசதி தினத்தில் தான், துறவிகளுக்கு திதி கொடுக்க வேண்டும். இதற்கு, சன்யஸ்த மஹாளம் என பெயர். 

துறவிகளின் பூர்வாசிரம குடும்பத்தை சேர்ந்தவர்களும், சீடர்களும் துவாதசி நாளில், மஹாளய தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதனால், குரு தோஷம் நீங்கும், வம்சம் தழைக்கும். நல்ல குழந்தைகள் பிறப்பர். 

நோயற்ற வாழ்வு வாழ்வதுடன், வீட்டில் மஹாலட்சுமி நிரந்தர வாசம் செய்வாள். 
இந்நாளில், துறவியரிடம் ஆசி பெறுவதும், அவர்களின் சமாதிக்கு சென்று.வழிபடுவதும் சிறப்பு. இன்றும் நாளை நண்பகல் வரையும் துவாதசி திதி என்பதால், இந்த தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close