மரகத லிங்கத்தின் சிறப்புகள்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 24 Sep, 2019 11:19 pm
maragatha-lingathin-sirappigal

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம், கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சிவ மகாத்மியம் தெரிவிக்கிறது. 

சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம், கேட்ட வரத்தைப் பெறலாம்.

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை, மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி, வியாபாரத்தில் வளர்ச்சி பெறவும், மரகத லிங்கத்தை வணங்கலாம்.

மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவராத்திரி,திருவாதிரை நட்சத்திரம் நாட்களில், மரகத லிங்கத்தை வழிபடுவது தனி சிறப்பு. வீட்டில் மரகத லிங்கத்தை வைத்து, தினமும்,

பக்தியுடன் சிவ பூஜை செய்தால், வீட்டில், மகாலட்சுமியும், பார்வதி தேவியும் வாசம் செய்வர்.
சிவ பூஜை செய்யும் வீடுகளில், கல்வி, செல்வம், வீரம் என அனைத்து நிறைந்திருக்கும்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close