நாளை மஹாளய அமாவாசை: பித்ரு கடன் தீர்க்க மறவாதீர்!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 06:06 pm
mahalaya-amavashya

முன்னோர் கடன் தீர்க்கும் முக்கிய நாள் நாளை. மஹாளய அமாவாசையான இந்த நாளில், நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தால், அவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு தேவையான உணவு அளித்ததாக ஐதீகம். 

பூத உடல் துறந்து மேலோகம் சென்ற நம் முன்னோரின் ஆத்மாக்கள், ஆண்டுக்கு ஒரு முறை, எமபுரியில் இருந்து,  தாகம் தீர்த்துக்கொள்ளவும், பசியாராவும், பூலோகத்தில் உள்ள தங்கள் சந்ததியினரின் இல்லம் தேடி வருவர். புரட்டாசியில் வரும் இந்த 15 நாட்களே மஹாளய புண்ய காலம் என்கிறோம். 

இந்த நாட்களில் தங்கள் முன்னோரை நினைத்து தரும் தர்ப்பணம், செய்யும் திவசம் ஆகியவை முன்னோர்களின் ஆத்துமாக்களை திருப்திப்படுத்தும். 

இதில் 14 நாட்கள் தர்ப்பணம் கொடுக்க முடியாதோர், நாளை வரும் அமாவாசை நாளிலாவது கட்டாயம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்ரு சாபம், தோஷம் நீங்கி நாமும் நம் சந்ததியும் அனைத்து அருளும் பெற்று பெரு வாழ்வு வாழலாம். 

அமாவாசை நாளில் செய்ய வேண்டிய தர்பண முறை குறித்து வரும் கட்டுரைகளில் விரிவாக காணலாம். 


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close