சிவனை போல் அம்பாளுக்கும் ஐந்தெழுத்து மந்திரமே!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 30 Sep, 2019 01:58 pm
navarathri-special-2

சிவனை"நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் வணங்குகிறோம். அதுபோல, அம்பாளுக்கும் "துர்க்கா' என்னும் சொல், பஞ்சாட்சரமாக விளங்குகிறது. த், உ,ர்,க்,ஆ ஆகிய ஐந்து எழுத்துகளின் சேர்க்கையே துர்க்கை. துர்க்கா என்ற மந்திரத்தை ஜெபித்தால், எதிரிகளின் தொல்லை நீங்கி மன தைரியம் உண்டாகும். இந்த சொல்லுக்கு "அரண்' "கோட்டை' என்று பொருள். வழிபடும் அடியவர்களைக் கோட்டை போலச் சுற்றி பாதுகாக்கும் துர்கையை " துர்க்கா தேவீம் சரணம் ப்ரபத்யே' என்று வேதம் போற்றுகிறது.

லலிதா சகஸ்ர நாமம்
பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானம் என்ற பகுதியில், அம்பிகைக்குரிய "லலிதா சகஸ்ரநாமம்' இடம் பெற்றுள்ளது. ஒரு சமயத்தில் சிவபெருமானின் விருப்பத்திற்கேற்ப, பார்வதி சாந்த கோலத்தில் அமர்ந்திருந்தாள். அப்போது தேவியின் திருவாயில் இருந்து "வசினீ' என்னும் எட்டு வாக் தேவதைகள் தோன்றினர். 

அவர்கள் போற்றித் துதித்த ஆயிரம் திருநாமங்களே "லலிதா சகஸ்ர நாமம்' ஆகும். இதனை, உலக நன்மைக்காக திருமாலின் அவதாரமான ஹயக்ரீவமூர்த்தி அகத்தியருக்கு உபதேசம் செய்தார். அகத்தியர் மூலம் இம்மந்திரம் பூலோகத்திற்கு வந்தது.
நவராத்தியின் ஒன்பது நாட்களும், லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது, மகத்தான பலனை தரும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close