நவராத்திரியை முதலில் கொண்டாடியது யார்?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 30 Sep, 2019 11:06 pm
special-navarathiri-6

நாடு முழுவதும் நவராத்திரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத நாட்டில், எந்த விழாவுமே பல ஆயிரம் ஆண்டுகளாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. எப்போது, இந்த விழா, முதலில் கொண்டாடப்பட்டது என, யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

புரட்டாசி மாதத்தை, எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது.  எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழா எப்போது முதலில் கொண்டாடப்பட்டது என, கூற முடியாவிட்டாலும், ராமாயண காலத்திலேயே நவராத்திரி கொண்டாடப்பட்டுள்ளது. நவராத்திரி பூஜை செய்து தான், சீதை இருக்கும் இடத்தை அறிந்ததாக, தேவி பாகவதம் கூறுகிறது

தமிழகத்தில், சோழர்கள் ஆட்சி  காலத்தில், நவராத்திரி திருவிழா, அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
நாயக்கர்கள் ஆட்சியில், நவராத்திரி வீடுகளில் மக்கள் கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது.  நவராத்திரி காலத்தில்தான், மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை, விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள். 

நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும், நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள் என, நாயக்கர் மன்னர்கள் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. 
Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close