மஹாலட்சுமியின் அருள் பெற்ற மஹான்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 03 Oct, 2019 11:32 pm
mahalakshmi-article

மஹாலட்சுமியின் அருள் பெற்ற, வேதாந்த தேசிகர் பற்றி நேற்று பார்த்தோம். மஹாலட்சுமியின் அருள் பெற்ற மற்றொரு மஹான் வித்யாரண்யர். அத்வைத ஆசாரியர்களில் மிகவும் முதன்மையானவர். . நாலு வேதங்களுக்கும் சேர்த்து விளக்கம் எழுதியவர்.  ஜோதிடம், வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம்,  அர்த்த சாஸ்திரம், இலக்கியத்துறை என எல்லாவற்றிலும், கரை கண்டவர். 

 வித்யாரண்யர் ஏழைப் பிரம்மச்சாரியாக இருந்தபோது, மஹாலட்சுமியைக் குறித்துக் கடும் தவம் செய்தார்.  தவத்தை பாராட்டி, வித்யாரண்யர்  முன், மஹாலட்சுமி தோன்றினாள்.  ‘இந்த பிறவியில் உனக்குத் செல்வதை அடையும் பாக்கியம் இல்லை. அடுத்த பிறவியில் உனக்கு அருள் செய்கிறேன்’ என கூறி, மஹாலட்சுமி மறைந்துவிட்டாள்.

வித்யாரண்யருக்கு ஆதி சங்கரர் நினைவு வந்தது. ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிறுவன் சங்கரனை முதலை பிடித்தது, அதை பார்த்து, அவரது தாய் கதறினாள்.
‘அம்மா, நீ பதற வேண்டாம். நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ள நீ அனுமதித்தால், முதலை என்னை விட்டுவிடும். ஏனென்றால், துறவு பெற்றுவிட்டால், அது மறுபிறவி போலாகும். இந்த பிறவியில், முதலையின் பிடிப்புக்கு ஆளாக வேண்டும் என்று எனக்கு விதி இருக்கிறது. அடுத்தபிறவியில்  அது என்னைப் பாதிக்காது” என்றார் சங்கரர். தாயும் சம்மதிக்க, ஆதி சங்கரர் துறவியனார்.

இதனால், தானும் துறவறம் மேற்கொண்டால், அடுத்த பிறவியாகிவிடும்,. அப்போது, மஹாலட்சுமி நிச்சயம் அருள் செயவாள் என, நினைத்த வித்யாரண்யர், உடன் துறவியானார்.

‘மஹாலட்சுமியே‘ இப்போது துறவியாகி, மறுபிறவி எடுத்துவிட்டேன்,. அருள் செய்ய வேண்டும்’ என, வித்யாரண்யர் வேண்டினார். 
மஹாலட்சுமியும் கருணை மழை பொழிய, வித்யாரண்யரை சுற்றி, தங்கமும் நவநிதியும் கொட்டி கிடந்தது. 

வித்யாரண்யருக்கு அதைப் பார்த்ததும், தாங்க முடியாத ஏமாற்றமும், துக்கமுமாகி விட்டது. ‘அடடா, தந்திரம் செய்வதாக நினைத்தேன்; கடைசியில் ஏமாந்து போய்விட்டேன். . வீட்டின் ஏழ்மை போவதற்காக செல்வம் கேட்டேன்.  இப்போதோ துறவியாகி விட்டேன். இனிமேல் எனக்கு ஏது வீடு? துறவி, பணத்தைத் தீண்டவே கூடாதே’ என புலம்பினார். 

வித்யாரண்யர் மகா புத்திசாலி என்பதால், ஏதாவது ஒரு காரியமாகவே, ஒரு காரணார்த்தமாகத்தான் அம்பாள் இப்படி செய்துள்ளாள்  என புரிந்து கொண்டார். 
அப்போது, இந்தியாவில், முஸ்லிம்கள் ஆட்சி செய்த காலம், குறிப்பாக, அலாவுதின் கில்ஜியின் தளபதி, மாலிக்காபூர், தென் இந்தியா மீது படையெடுத்து வந்திருந்த காலம், தமிழகம் உட்பட தென்  மாநிலங்களில் கோவில்களை இடித்து, அவனக சேதப்படுத்தினான். அவனை எதிர்க்க, நல்ல நிதி வசதிப்படைத்த, ஹிந்து அரசன் யாரும் இல்லை. 

இதையறிந்த வித்யாரண்யர், மஹாலட்சுமி கொடுத்த நிதியை வைத்து, ஹிந்து ராஜ்யத்தை உருவாக்க எண்ணினார். 
ஆடு மேய்த்து இரண்டு சிறுவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஹரிஹரன், புக்கன் என பெயர் வைத்தார்.

இவர்களால் உருவாக்கப்பட்டதுதான், விஜயநகர சாம்ராஜ்யம், வித்யாரண்ய சாம்ராஜ்யம் என்றுதான், இருவரும், பெயர் வைத்திருந்தனர் அதுவே விஜயநகர சாம்ராஜ்யமாக மாறிவிட்டது. 

ஹரிஹரன், புக்கன் என்று பெயர். அந்த துங்கபத்திரைப் பிரதேசத்திலேயே ஓரிடத்தில் ராஜதானியை ஸ்தாபித்து, அந்த இரண்டு பேரையும் அங்கே ராஜாக்களாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

 இந்த வம்சத்திலேதான், உலகமே கொண்டாடுகிற கிருஷ்ணதேவராயர் வந்தார். இவர்கள் அத்தனை பேரும் செய்த காரியத்துக்கெல்லாம் வித்து, வித்யாரண்யர் போட்டதுதான். ராஜ்யத்தை ஸ்தாபித்தது, விஸ்தரித்தது, அதைப் பல பகுதிகளாகப் பிரித்துப் பல பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சி நடத்தியது எல்லாவற்றிற்கும் வித்யாரண்யரே மூல புருஷர்.

ஆனால், அதேநேரத்தில், அவர், துறவியாகவே வாழ்ந்தார், சிருங்கேரி சஙகர மடத்தின் பீடாதிபதியாக, ஹிந்து தர்மத்தை காத்தார். விஜயநகர பேரரசின் ராஜகுருவாக இருந்தாலும், தவ வாழ்க்கையே வித்யாரண்யர் வாழ்ந்தார்.இரண்டாவது சங்கரர் என் பெயர் பெற்றார். 

மஹாலட்சுமியின் கடை கண் பார்வை நம் மீது பட்டாலே போதும், நம் வாழ்வு வளமாகிவிடும். 
நவராத்தரி நன்னாளில், மஹாலட்சுமியை வழிபடுவோம். மஹாலட்சுமியை கீழ் கண்ட மந்திரத்தை கூறி வழிபடுவோம்.

மஹாதேவ்யேச்ச வித்மஹே! 
விஷ்ணு பத்னீச தீமஹி! 
தன்னோ லட்சுமி பிரசோதயாத்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close