12 ராசிகளுக்கான பிரத்யேக குருபெயர்ச்சி பலன்கள்!

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 03:16 pm
gurupeyarchi-palan-for-12-rasigal

நவகிரகங்களில் எப்போதும் நன்மையே வாரி வழங்கும் முக்கிய கிரகமான குரு எனப்படும் வியாழன், இம்மாதம் 28ம் தேதி, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

இதுவரை செவ்வாய்க்கு சொந்தமான வீட்டில் இருந்து அருள் புரிந்து வந்த குருநாதர், இனி தன் சொந்த வீட்டில் அமர்ந்து நல்லாசி வழங்கப்போகிறார். இம்முறை எந்தெந்த ராசிகளுக்கு எத்தனை சதவீதம் நன்மை பயக்கப்போகிறார் என்பதை ராசி வாரியாக பார்க்கலாம். 

மேஷம் : இம்முறை குரு உங்கள் வெற்றிக்கு 9ம் இடத்தில் அமர்கிறார். இது பாக்கியஸ்தானம் என்பதால், வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு அமோக பலன்களை வாரி வழங்க உள்ளது. 
மொத்தத்தில், 100க்கு 93 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அவ்வளவு நற்பலன்களை வாரி வழங்கவுள்ளார் குருநாதர். 

ரிஷபம் : உங்கள் ராசிக்கு 8ம் இடமான அஷ்டமத்தில் அமரும் குருவால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். எனினும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. என்றாலும், 100க்கு 40 மதிப்பெண்கள் என்ற அளவில் மட்டுமே உங்களுக்கான பலன் தரும். 

மிதுனம் : உங்கள் ராசிக்கு நேர் எதிர் ஸ்தானமான, 7ம் வீட்டில் அமரும் குருவானவர், 95 சதவீத நன்மை பயக்கப்போகிறார். தொட்டது துலங்கும். புது முயற்சிகள் வெற்றிபெறும். 

கடகம்: உங்கள் ராசிக்கு 6ம் இடத்திற்கு வரும் குருநாதர், அவ்வளவாக சாதகமான பலன்களை தரப்போவதில்லை.பொதுவாக ஜோதிட ரீதியில் கடகத்தில் உச்சம் பெரும் குரு, இம்முறை அந்த ராசிக்கு 6ம் இடத்தில் அமர்வதால் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவார். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால், 40 சதவீத பலன்களே கிடைக்கும். 

சிம்மம் : இந்த குரு பெயர்ச்சியில் அதிக லாபம் பெறப்போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான். ராசிக்கு 5ம் இடத்தில் குரு அமர்வதால், நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள், 100க்கு 99 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள். 

கன்னி : பெரிய அளவுல் முன்னேற்றமோ, சருக்களோ இருக்காது. எனினும் தன் உடல்நிலையில், தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. மொத்தத்தில், 55 மதிப்பெண்கள் அளவுக்கு உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.

துலாம் : சற்று மோசமான காலம் என்றே கூறலாம். சோதனைகள் பலவற்றை கடந்தால் மட்டுமே ஓரளவாவது சாதிக்கலாம் என்ற நிலை இருக்கும். தொழில், வேலையில் கவனம் தேவை. உங்களுக்கான மதிப்பெண் 42.

விருச்சிகம்: சிம்மம், மிதுனம் ராசிகளை தொடர்ந்து நீங்களும் இந்த குரு பெயர்ச்சியால் அதிக பலன் அடைய உள்ளீர்கள். அனைத்திலும் வெற்றி, தோல்விகள் ஓடிவிடும் காலம். கவலை மறந்து வாழும் நேரம் இது. உங்களுக்கான மதிப்பெண், 96. 

தனுசு :குருநாதர் தன் சொந்த வீட்டிற்கு வருகிறார். எனினும் குரு பார்வையால் பிற ராசிக்காரர்களுக்கு நல்லதை கொடுத்துவிடுவார். 70 சதவீதம் நன்மை என்றாலும், 30 சதவீதம் சோதனையும் இருக்கும். கவனமாக செயல்பட வேண்டிய காலம் இது. 

மகரம் : மகர ராசிக்கு  மிக முக்கியமான காலம் இது. இன்னும் சில நாட்களில் ஜென்ம சனி வேறு வரவிருக்க்கிறது. எனவே குருவும் அவ்வளவு சாதக நிலை எனக்கூற முடியாது. உங்களுக்கான மதிப்பெண் 63.

கும்பம்: சிம்மத்தை போலவே இந்த குரு பெயர்ச்சியால் ஓஹோ  என இருக்கப்போகும் மற்றொரு ராசி கும்பம். லாபஸ்தானத்தில் குரு அமர்கிறார். இதற்க்கு மேல் என்ன வேண்டும். உங்களுக்கு இம்முறை எல்லா காரியங்களிலும் கிட்டத்தட்ட 98 சதவீதம் வெற்றிதான்.

மீனம் : சற்று சோதனை காலம் என்றே கூறலாம். நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தால், மேலதிகாரிகள் மட்டுமின்றி, உங்களுக்கு கீழ் வேலை செய்வோராலும் சிக்கல்களை சந்திக்க நேரும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தவிர்ப்பது நலம். கோபத்தை கட்டுப்படுத்தினால் வீண் வம்பிலிருந்து தப்பலாம்.  மொத்தத்தில் உங்களுக்கு 50 சதவீதம் நன்மையும், 50 சதவீதம் சோதனையும் நிறைந்ததாக இந்த குருபெயர்ச்சி இருக்கும். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close