இன்று சாம்பவியை வழிபடுவோம்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 04 Oct, 2019 11:01 pm
navarathiri-sambavi

நவராத்தரி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறோம். நவராத்திரியின் ஏழாம் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை நாம் வழிபடவேண்டிய தெய்வம் சரஸ்வதி. 

நவராத்தியின் ஏழாம் நாளான இன்று,  நாம் சரஸ்வதி தேவியை, சாம்பவியாக வழிபடவேண்டும். மந்திரம் - ஓம் சாம்பவ்யை நம: சுவாசிநியின் பெயர் - காலராத்ரி; மந்திரம் - ஓம் காலராத்ர்யை நம:; மலர் -பன்னீர் இலை; வாத்தியம் - கும்மி; ராகம் - புன்னாகவராளி; நைவேத்தியம் - எலுமிச்சை சாதம்.

இன்றைய தினம் எட்டு வயது பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சாம்பவியாக பாவித்து பூஜித்து, எலுமிச்சை சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தில் செய்த சுண்டலையும் அம்பிகைக்கு நிவேதனம் செய்து பிரசாதமாக வழங்கவேண்டும். இப்படி வழிபட்டால் என்றும் நிலைத்த புகழ் கிடைக்கும்.

நவராத்திரியின் ஏழாவது நாளில், விரதமிருந்து வழிபட்டால், வேண்டிய வரங்கள் அனைத்தையும் அருள்வாள் அம்பிகை.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close