இன்று துர்காஷ்டமி: நவராத்திரியின் முக்கிய வழிபாட்டு நாள்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 05 Oct, 2019 10:39 pm
today-durgashtami-how-to-perform-pooja

ஒவ்வொரு திதியும் ஒரு தெய்வத்துக்கு உகந்தது. அதில் அஷ்டமி திதி, துர்க்கா தேவிக்கு சிறப்பானது. கிருஷ்ண பரமாத்மா அவதரித்த அதேநாளில்தான், கோகுலத்தில் மாயா துர்கையின் அவதாரமும் நிகழ்ந்தது. எனவே, கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதி, துர்கை வழிபாட்டுக்கு உகந்த திதியாக அமைந்தது.

மாதம்தோறும் வரும் அஷ்டமி திதியில், ராகு காலத்தில்,  துர்கையை வழிபடுவது மிகவும் விசேஷம்.  அஷ்டமி நாட்களில், கோவில்களில் துர்க்கைக்கு, சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் நடப்பது வழக்கம். புரட்டாசி மாத்தில் வளர்பிறையில் வரும் அஷ்டமி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என, அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவமி, மகா நவமியாகப் போற்றப்படுகிறது.

நவராத்திரி விழாவின் எட்டாவது நாள்தான் துர்காஷ்டமியாக போற்றப்படுகிறது. .நவராத்திரி எட்டாவது நாளில் நாம் வழிபடவேண்டிய தேவி நரசிம்ஹி. தன் பக்தன் பிரகலாதனுக்காக, இரண்யனை சம்ஹாரம் செய்வதற்காக, பகவான் நரசிம்ஹ அவதாரம் எடுத்தபோது ,நரசிம்ஹரின் சக்தியாகத் திகழ்ந்தவள் நரசிம்ஹி. நரசிம்ஹி மனித உடலும், சிங்க முகமும் கொண்டு, சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருபவள். இவளை வழிபடும் பக்தர்களுக்கு, எதிரிகளால் இன்னல்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பவள்.

நவராத்தரி எட்டாவது நாளான இன்று, நாம் வழிபடவேண்டிய குமாரி: - துர்கா தேவி
மந்திரம்:- ஓம் துர்காயை நம:,
சுவாசிநியின் பெயர் :- மஹா கவுரி; 
மந்திரம்: - ஓம் மஹா கவுர்யை நம:,
மலர் :- விபூதி பச்சை; 
நிவேதனம்: - பால் பாயசம்.

இன்றைய தினம், ஒன்பது வயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை துர்கையாக பாவித்து பூஜை செய்து, அவர்களுக்கு ஆடை உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கி மகிழ்விக்கவேண்டும். இப்படிச் செய்வதால், அம்பிகை மனம் மகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை அருள்புரிவாள்.

அஷ்டமி தினத்தன்று வீடுகளில் துர்க்கை அம்மனை நினைத்து வழிபடுதல் உடல் ஆரோக்கியத்தையும், மன மகிழ்ச்சியையும் தரும். துர்க்காஷ்டமி நாளில் தன்னம்பிக்கை பெருகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் துர்க்கையை வழிபடுதல் வேண்டும். செம்பருத்தி மற்றும் செவ்வரளி மாலை சூட்டி துர்க்கை அம்மனை வழிபடுதல் கூடுதல் பலன்களைத் தரும். மேலும் துர்க்கைக்கு உரிய பாடல்களை மனமுருகிப் பாடித் துதிப்போருக்கு, கஷ்டங்கள் அகலும் வாழ்க்கை வளமாகும் என்பது ஐதீகம்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close