சரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும்?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 06 Oct, 2019 10:59 pm
navarathiri-special

நவராத்திரி வைபவம், நாளை விஜயதசமியுடன் நிறைவு பெறுகின்றது. நவராத்திரி 9-ம் நாளான இன்று, நாம் வழிபடவேண்டிய தெய்வம் சரஸ்வதி தேவி. 

நவராத்திரி முழுவதும் விரதமிருந்து அன்னையை வணங்காதவர்கள் கூட, சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியை வணங்கினால் போதுமானது.  

வீடுகள்,அலுவலகங்களில், இன்று,  சரஸ்வதி தேவியை வணங்கி பூஜைகள் செய்வர், பெரும்பாலும் அலுவலகங்களில் யாகம் செய்து பெரும் பூஜையாக மேற்கொள்கின்றனர். வீட்டிலும் அது போல், முறைப்படியான பூஜைகள் மேற்கொள்ளலாம்.

அது முடியாதவர்கள், சரஸ்வதி பூஜையன்று வழிபாட்டிற்குரிய இடத்தில் ,சரஸ்வதி படம் வைத்து அலங்கரித்து வழிபாடு செய்யலாம்.

சரஸ்வதிக்கு அருகம்புல் மற்றும் மலர்மாலை சார்த்தி மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.
சரஸ்வதி தேவி வெண்மை நிறத்துடன் இருப்பவள், அதனால் வெண்தாமரை, மல்லி, முல்லை, இருவாட்சி, சம்பங்கி போன்ற பூக்கள் அவளுக்கு ஏற்ற பூக்களாய் உள்ளன. அலங்கரித்த சரஸ்வதி உருவமாய் இருப்பின், முத்துமாலை அணிவித்த பூஜை செய்யலாம்.  

கலசம் வைத்து கலைவாணியே எழச்செய்தும், பூஜைகளை மேற்கொள்ளலாம். சரஸ்வதி படத்திற்கு அலங்காரம் செய்த பின், ஐந்து முக குத்து விளக்கினை ஏற்றி, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தலைவாழை இலையில் பழங்கள், அவல், பொறிகடலை போன்றவை வைத்து, பூஜையை தொடங்க வேண்டும்.  

சரஸ்வதி ஸ்தோத்திரம் மற்றும் ஆராதனை பாடல்களை பெரியவர்களும், குழந்தைகளும் ஒரு சேர சொல்லி, பின் அவளுக்கு பிடிதத நிவேதனமான  பால்பாயசம், வெள்ளைகடலை சுண்டல், பொங்கல் போன்றவை வைத்து, கற்பூர தீபாரதனை செய்திட வேண்டும்.

சரஸ்வதி தேவியின் படத்தின் முன் நமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், எழுதுகோல், குழந்தைகளின் பாடபுத்தகங்கள் அவசியம் வைத்து வணங்குதல் வேண்டும். அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானாமாக வழங்கலாம்.

சரஸ்வதி பூஜை முடிந்த பின், மறுநாள் காலை, மறுபடியும் சரஸ்வதி தேவியின் முன் புதிய இலையில் வெற்றிலை பாக்கு, பழம், பொறிக்கடலை வைத்து பூஜை செய்த பின் தான். படத்தை எடுக்க வேண்டும். முகம் மற்றும் கலசம் வைத்திருந்தால். எடுத்து நீர் நிலைகளில் கறைதது விடலாம்.

சரஸ்வதி தேவி ஞானத்தின் பிறப்பிடம் அவளை வணங்கி ஞான தெளிவை பெறுவோம்.
இன்று இந்த மந்திரம்  சொல்லி வழிபடுவது சிறப்பு.

"ஒம் வாக்தேவிச வித்மஹே
பிரம்ம பத்னீச தீமஹி
தன்னோ வாணி பிரச்சோதயாத்"

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close