சரஸ்வதி தேவியின் முக்கிய ஆலயங்கள்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 07 Oct, 2019 10:51 pm
saraswathi-temple-in-tamilnadu

சிவபெருமானின் சாபத்தால், பிரம்மனுக்கு, பாரத நாட்டில், சில இடங்களில் மட்டுமே ஆலயம் உள்ளது, அதனால், சரஸ்வதிக்கும் குறைவாகதான் கோவில்கள் உள்ளன. சரஸ்வதி கோவில்கள் சில வற்றை இங்கு பார்ப்போம்.

பிரம்மவித்யாம்பிகை (திருவெண்காடு)

புத்தியை இயக்கும் சக்திகளில் மிகவும் முக்கியமானது புதன் கிரகம். ஜாதகத்தில் புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வியும், மனன சக்தியும், கற்பனை வளமும் தீர்மானிக்கப்படுகின்றன , கல்வியில் சிறந்தோங்க புத பகவானின் அருளைப்பெற வேண்டியது அவசியம்.
 
திருவெண்காடு தலத்தில் புத பகவானுக்கு தனிச் சந்நதி உள்ளது. மேலும், மூலவராக ஸ்வேதாரண்யேஸ்வரரும், பிரம்ம வித்யாம்பிகை எனும் திருப்பெயரோடு அம்பாளும் திகழ்கிறார்கள். அம்பாள் இங்கே சரஸ்வதிதேவியாகவே வழிபடப்படுகிறாள். சீர்காழியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இக்கோவில்.

சரஸ்வதி (தாடிக்கொம்பு)

இத்தலம், திண்டுக்கல்- வேடசந்தூர் பாதையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மண்டூக மகரிஷி, தன் சாபம் நீங்க தவமிருந்த தலம் இது.  கல்வியை அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதிக்குத் தனித்தனியே சந்நதிகள் அமைந்துள்ளன. சரஸ்வதி பூஜை நாளில் சரஸ்வதிதேவிக்கு விசேஷ ஆராதனை, பூஜைகள் நடைபெறுகின்றன.

ஞான சரஸ்வதி (உத்தமர்கோவில்)

இது மும்மூர்த்திகள் தலம். சிவபெருமான் பிட்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்ற தலம், பிச்சாண்டார் கோவில் எழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணு புருஷோத்தமன் என்ற திருநாமத்தில் அருள் பாலிக்கிறார்.. அதனால், இந்த கோவில், உத்தமர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. 

பிரம்மா பூவுலகிலேயே இருக்க வேண்டி பெருமாளை நோக்கி தவமிருந்த தலம். பெருமாள் பிரசன்னமாகி, ‘‘நீ இங்கேயே இருக்கலாம். உனக்கென்று ஆலயங்கள் இல்லையென்று கவலையுறாதே. தன்னை படைத்தவனை பார்க்க வேண்டுமென்று நிறைய பக்தர்கள் இங்கே உனைக் காண வருவார்கள்” என்று சொல்லி, தன் ஆலயத்திலேயே அமர்த்தி வைத்துக் கொண்டார். 

இங்கு பிரம்மனைப் போல சரஸ்வதிக்கும் தனிச் சந்நதி உள்ளது. இவள் ஞான சரஸ்வதியாக வணங்கப்படுகிறாள். வீணை இல்லாமல், கையில் ஓலைச் சுவடியோடும் ஜபமாலையோடும் தேவி காட்சியளிப்பது அபூர்வமானது. ஸ்ரீரங்கம் அருகே, இந்தலம் அமைந்துள்ளது .

தொடரும்....
 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close