புண்ணியம் பெறும் விதி இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 08 Oct, 2019 04:58 pm
specialeties-of-ekadashi

ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர், ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால், தன் நாட்டு மக்கள் யாவரும், பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும்  என, உத்தரவிட்டார்.

அத்துடன் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள், ராஜதண்டனைக்கு ஆளாவர் என, அறிவித்தார். 
 இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை, அரசாங்கத்துக்கு பயந்தே, ஏகாதசி விரதத்தை கடைபிடித்தனர். 

ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. மக்களும், அரசரும் சுபிட்சமாக வாழ்ந்தனர். 
அரசர் ருக்மாங்கதன், தன் நாட்டு மக்களை கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால் துஷ்டமோகினிக்கு வேலை இல்லாமல் போனது.

ஆம்,  ஏகாதசி விரதம் இருக்காதவர்களுக்கு,  கஷ்டத்தை தர வேண்டியது, துஷ்ட மோகினியின் வேலை.
ருக்மாங்கதன் நாட்டில் மட்டும், அதற்கு வேலை இல்லாமல் போனது.

பொறுத்து பொறுத்து பார்த்த மோகினி, கடைசியில், மஹா விஷ்ணுவிடம்  ருக்மாங்கதனை பற்றி புகார் சொன்னாள்.தன் பக்தனான ருக்மாங்கதன், தன் நாட்டுமக்கள் மேல் அதிக பிரியத்துடன் இருப்பதால் இப்படி செயல்படுகிறான் என்பதை உணர்ந்த மஹா விஷ்ணு,  ருக்மாங்கதன் முன் தோன்றினார்.

‘நீ யாரையும், ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என, கட்டாயபடுத்தக்கூடாது. ஏகாதசி விரதம் என்பது, புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ, அவர்களே விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக, நீ யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்’ என்றார்.

பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை.‘ஏகாதசி விரதம் யார் இருக்கவில்லையோ, அவர்களிடம்தான் துஷ்ட மோகினிக்கு வேலை’ என்கிறது, விஷ்ணு புராணம்.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close