சனி பாதிப்பிலிருந்து தப்பிக்க எளிய வழி!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 09 Oct, 2019 11:41 pm
special-article-about-sani

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க,  எளிய வழி ஒன்று உள்ளது. பச்சரிசியை ஒரு கையில் அள்ளி, அதை நன்கு பொடி செய்து, சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். 

அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால், நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால்,  இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும். 

பச்சரிசியை  எறும்புகள், மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை  ஆண்டுகளுக்கு. எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை, கிரக நிலை மாறும். 

எனவே நாம் அடிக்கடி, பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம்.  இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால், சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் என்பது சித்தர்களின் வாக்கு. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close