பிரதோஷ விரதம் இருப்பது எப்படி?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 10 Oct, 2019 10:25 pm
today-pradosham-special-article

இன்று பிரதோஷம். இந்த நாள், சிவபெருமானை பழிப்பட சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என, சிவபுராணங்கள் கூறுகின்றன.

பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை, நந்தி தேவர் தன்னுடைய தவத்தை கலைத்து,  சிவனை நோக்கி விரதம் இருப்பவர்களின் கோரிக்கையை கேட்டு ,அதை நிறைவேற்றுவார். 

பிரதோஷ விரதம்  எப்படி இருப்பது?

பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரதம் இருப்பவர்கள்,  காலையில் எழுந்து குளித்துவிட்டு, அந்த நாள் முழுக்க சிவ நாமத்தையோ அல்லது ஓம் நமசிவாய  என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம்.  சிவபுராணம் படிப்பது சிறப்பு. 

மாலை வேலையில் சிவன் கோவிலுக்கு சென்று, நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. 

நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வலம் வந்து, விரதத்தினை முடிக்கலாம். 

பிரதோஷ விரதத்தினை முடிக்கும் நேரத்தில்,  நம்மால் முடிந்தவரை, ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close