எளிய பரிகாரங்களும், பலன்களும்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 10 Oct, 2019 10:35 pm
parigarangalum-palangalum

பரிகாரம் என்றவுடனே நம்மில் பலருக்கும் அச்சம் ஏற்படும், நம்மால் அவற்றை செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்படும். ஆனால், அன்றாட வாழ்வில் நாம் எளிதாக செய்ய சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை செய்தால், நாம் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும். அவற்றை பார்ப்போம்.

 பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

 துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றி வளர உதவி செய்தால், எத்ததைய பாவமும் நீங்கும். 

கோவில்களில் மலர்ச்செடிகள் நட்டு வைத்தால், வீட்டில் மங்கலம் பெருகும். 

 ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால். ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

 தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால், கர்மம் அகலும்.

பசியோடு வருபவரை உபசரித்தால், மோட்சம் கிட்டும்.

தினசரி தியானம் செய்வதால், நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

காக்கைக்கு காலையில் உணவிட்டால், பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

கோவில் திருப்பணிக்கு உதவி செய்தால், மேன்மை உண்டாகும்.

உழவாரப் பணிகளை மேற்கொண்டால், பிறவிப் பயனை அடைய இயலும்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close