வெற்றிலைக்கு ஏன் முக்கியத்துவம்?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 11 Oct, 2019 11:19 pm
specialities-of-vetrilai

மருத்துவத்தை, ஆன்மிகத்தில் கலந்து சொன்னதுதான் நமது முன்னோரின் பெருமை. அந்தவகயைில், எந்த விழாக்களிலும், முதன்மை இடம் பெறுவது வெற்றிலை. குறிப்பாக, சாப்பிட்டவுடன் வெற்றிலை போட  சொல்லியுள்ளனர். இதற்கு, மருத்துவ காரணங்கள் பல உள்ளன. 

நமது உடலில் சுரக்கும், 20 விதமான அமினோ அமிலங்கள், வெற்றிலையில் உள்ளன.  ஜீரணத்துக்கு பெரிதும் உறுதுணையாகும் இந்த அமினோ அமிலங்களை, வெற்றிலை மூலம் நாம் அடையும்போது, ஜீரணம் எளிதாகின்றது. 

அதனால்தான் நம்முன்னோர்கள், உணவுக்குப் பின் தாம்பூலம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம், மங்கலப் பொருள் என்பது பலர் அறிந்த உண்மை. 

ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலத்தை மெல்லும் போது, உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன், ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது.  வெற்றிலைக்கு, பால் உணர்வை துாண்டும், மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி உள்ளது. 

அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு, தாம்பூலம் போடுவது, ஒரு சடங்காக நடைபெறுகிறது. வெற்றிலையின் காம்பு பகுதி, மூதேவிக்கு உரிய பாகமாகும். எனவே வெற்றிலை காம்பை அடியோடு கிள்ளி எரிந்து விட்டு, சாப்பிட வேண்டும்.

முனை ஒடிந்த வெற்றிலை சாப்பிட்டாலும் பலன் இல்லை , காரணம் வெற்றிலை முனையில், ஸ்ரீதேவி குடிகொண்டுள்ளார். அவளை நீக்கி சாப்பிட்டால். செல்வ வளம் சேராது. முனை ஒடியாத,  ஓட்டை இல்லாத வெற்றிலையே, பூஜைக்கு சிறந்தது.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close