வாய்ப்பு கொடுப்பான் இறைவன்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 15 Oct, 2019 11:21 pm
special-devotional-article

நம்மை உருவாக்கியவன் இறைவன். நாம் எவ்வளவு தவறு செய்தாலும், நம்ளை தாயுள்ளத்துடன் மன்னித்து, நாம் திருந்துவதற்கு வாய்ப்புகளை கொடுப்பான். திருந்தவில்லை என்றால் மட்டுமே அழிப்பான். இரணியனுக்கு அந்த வாய்ப்பு, நரசிம்மரின்  மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது. அவன் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

ராவணனுக்கு அந்த வாய்ப்பு ‘இன்றுபோய் நாளை வா’ வில் கிடைத்தது. அவனும் அதை கோட்டை விட்டான்.  மஹாபாரத்ததில், துரியோதனனுக்கு, கண்ணன் துாது சென்ற போது கிடைத்தது.விஸ்வரூபமெடுத்து  தான் யார் என்பதை உணர்த்தி, துரியோதனன் சிந்திக்க ஒரு வினாடி கொடுத்தான்.

இதைதான், ‘ஷண நேரம்’ என்பாரகள். ஒவ்வொரு மனிதருக்கும் ் வாழ்நாளில் ஒருமுறை இந்த நேரம் வரும். அப்போது எடுக்கும்  முடிவு தான், அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.

குருஷேத்திரத்தில், அர்ச்சுனனுக்கு  குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்து, ‘போரிடுகிறாயா; வில்லை கீழே போடுகிறாயா?’என கேட்டான் இறைவன். டைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் அர்ச்சுனன்.

கர்ணன், கும்பகர்ணனுக்கும், இதுபோல் வாய்ப்பு கொடுத்தான். ஆனால், செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காக வாய்ப்பை அவர்கள் நழுவவிட்டனர். 
இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை. திருந்துவதற்கு எத்தனை  சந்தர்ப்பம் தர முடியுமோ, அத்தனை  சந்தர்ப்பம் கொடுக்கிறான்.
இரணியனை எப்போது அவன் கொன்றான்? பிரகாலாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும், அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தான்.

ஒரு சிறுவனை கூட, தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும், இரணியன் திருந்தவில்லை. இறுதியில் நரசிம்மமாய் வந்து இரணியனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி ,அவன் விழிகளை உற்றுநோக்கினான் நாராயணன். அப்போதும்  அவன் திருந்தவில்லை.இரணியனின் விழிகளில், நாராயனன் கண்டது வெறுப்பைத்தான். 

இனிமேல், இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்த பின்னரே, அவன் வயிற்றை கிழித்து, அவனை மாய்த்தான் நாராயணன்.
ராவனனை வென்றவன் கார்த்தவீரியார்சுனன்.கார்த்த வீரியாசுனனை கொன்றவன் பரசுராமன். பரசுராமனை ராமன் வென்றபோதே, ராம,ராவன யுத்தத்தின் முடிவு தெரிந்துவிட்டது. ராவணனை கட்டி வனமெங்கும் இழுத்துபோன வாலியை, ராமர் கொன்ற போது, அது மீண்டும் ஊர்ஜிதமானது. 

அதன்பின் நடந்ததெல்லாம் ராவணன் திருந்த தரப்பட்ட சந்தர்ப்பமே. ஆயுதமேந்தி தோற்ற ராவணனை அன்றே கொல்லாமல் "இன்று போய் நாளை வா" என சொல்லி அவன் திருந்த மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தந்தான்.ராவணன் திருந்தவில்லை.

அவனை வேறு வழியின்றி மாய்த்தான். இறைவன் தரும் சோதனைகள், தோல்விகள், நாம் திருந்துவதற்கும், முன்னேறுவதற்கும், கிடைத்த வாய்ப்புகளாக கருதி நாம் விழிப்படைய வேண்டும். அதன்பின், நமககு  எப்போதும் வெற்றி தான். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close