ஆணவத்துக்கு கிடைத்த தண்டனை!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 18 Oct, 2019 03:18 pm
aanmiga-katturai

"வைகுண்டத்தில் ஒரு நாள், மஹா விஷ்ணு, தமது பாதுகைகளை பள்ளியறைக்குள் விடுத்து பாம்பணையில் படுத்தார், அதை பார்த்த மகா விஷ்ணுவின் கீரிடத்துக்கு, கோபம் வந்தது. 

' பாதுகையே!கண்ட இடமெல்லாம் மிதிக்கும் நீ ,எப்படி பள்ளியறைக்குள் வரலாம்; வெளியே போ ’ என, கிரீடம்  விரட்டியது. 
‘நானாக வரவில்லை;..பகவானின் திருப்பாதங்கள் தான் என்னை உள்ளே விட்டது’ என, பாதுகை பணிவுடன் பதில் அளித்தது. 

‘பகவானின் தலையை அலங்கரிப்பவன் நான். என்னையே எதிர்த்து பேசுகிறாயா; முதலில் வெளியில் போ’ என, கூறியது கிரீடம்.' 
அதற்கு பாதுகை, ‘பகவானின் அடியார்கள், பாதுகை அணிந்த அவரது பாதங்களை தான் பெரிதாக வழிபடுகின்றனர்’ என்றது.

இதை கேட்ட சங்கு, மற்றும் சக்கதரத்துக்கும் கோபம் ஏற்பட்டது.‘ எங்களை விட நீ பெரியவனா! நாங்கள் பகவானின் உடலில் வாசம் செய்கிறோம். நீ சாதாரண காலணி. முதலில் இந்த இடத்தை விட்டு போ’ என, கூறின. இதை கேட்டு பாதுகை கண்ணீர் விட்டு, பகவானை பிரார்தித்தது. 

இதையறிந்த மஹாவிஷ்ணு, ‘பாதுகையே வருத்தப்படாதே. இவர்கள் மூவரும் உன்னை வழிபடும் காலம் வரும்’ என்றார்.
இதன் பின் ராமாவதாரம் நடந்தது. மஹாவிஷ்ணு ராமராக அவதரிக்க, சங்கும், சக்கரமும், பரதனாகவும், சத்ருக்கனனாகவும் பிறந்தன. ஆதிசேஷன் லட்சுமணனாக பிறந்தது.

தந்தை சொல் கேட்டு வனவாசம் மேற்கொண்டார் ராமர். பரதனும், சத்ருக்கனனும் கெஞ்சி கேட்டு, ராமர் வர மறுத்துவிட்டார். 
இதையடுத்து, அவரது பாதுகையை வாங்கி, தங்கள் தலையில் சுமந்து வந்தனர். அயோத்தி மன்னராக பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்தனர், பாதுகையின் மீது ராமர் அணியும் கிரீடத்தை வைத்தனர். 

14 ஆண்டுகள், சங்கான பரதனம், சக்கரமான சத்ருக்ணனும், பாதுகையை வழிபட்டனர். ராமாவதாரம் முடிந்து, வைகுண்டத்துக்கு மஹாவிஷ்ணு திரும்பினார். அப்போது, மஹாவிஷ்ணு, கிரீடம், சங்கு, சக்கரத்தை பார்த்து, ‘ பாதுகையை கேவலமாக பேசிய நீங்கள், அந்த பாதுகைக்கு பூஜை செய்தீர்கள். உலகில் எதுவும் கேவலைமில்லை. யாரும், உயர்ந்தவர்கள் இல்லை. ஆணவத்துடன் பேசியதால், உங்களுக்கு கிடைத்த  தண்டனை இது’ என்றார்.
மூன்றும் தலை குனிந்தன. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close