காலில் கொலுசு அணிவது ஏன்?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 19 Oct, 2019 05:55 pm
what-purpose-womens-wearing-kolusu-in-legs

பாரத நாட்டில்  வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. நகை ஒவ்வாமை போன்ற உபாதைகள் வெள்ளியால் வருவதில்லை. 

நகைகள் என்பது நம் மூதாதையர்கள் காலத்தில் இருந்து மிக முக்கியம் வாய்ந்தவையாக கருதப்பட்டு வந்துள்ளது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். 

சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும், குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும், கொலுசு அணிவிக்கப்படுகிறது. வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி ஆரோக்கியமளிக்கிறது.

பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். இதற்கு, அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது. 

உணர்ச்சி வசப்படுதல் என்பது,  எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக் கொண்டிருப்பதால், குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

இதை நன்கு அறிந்துதான், பெண்களின் கால்களில் வெள்ளி கொலுசுகளை அணிய நம் முன்னோர் சொல்லியுள்ளனர்.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close