வீட்டுக்குள் எமன் வர பயப்படுவான்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 26 Oct, 2019 11:39 pm
special-article-about-diwali-1

தீபாவளியன்று எண்ணெய்யில் லட்சுமி தேவியும் தண்ணீரில் கங்கா தேவியும் உறைகின்றனர். இதற்கு விஷ்ணு புராணத்தில் ஒரு வரலாறும் உண்டு.

நரகாசுரனுடன் விஷ்ணு போரில் இருந்த சமயம், அரக்கர்கள், லட்சுமி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றனர். உடனே தேவி, பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது. 

இந்தப் புண்ணிய தினத்தில் தான், பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் செய்து கொண்டார். அப்போது தேவர்களுடன் யமதர்மராஜனும் பணிந்து போற்றினார். 

இதை கண்ட லட்சுமி, யமனிடம் தீபாவளி பண்டிகையை முறையாக கடைப்பிடிப்பவர்களது வீட்டில், என் உத்தரவு இன்றி நீ பிரவேசிக்கக்கூடாது என்று உத்தரவிட்டாள். லட்சுமி தேவியின் அந்த உத்தரவை யமதர்மராஜனும் ஏற்றுக்கொண்டார்.

தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம். யமதர்மராஜனை தடுப்போம்.
 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close