எமனுக்கு மிகவும் பிடித்த விழா!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 29 Oct, 2019 07:49 pm
eman-will-like-this-festival

ஐப்பசி மாதம் வளர்பிறை துவிதியை திதி எம துவிதியையாக, வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். பால்பிஜி என்றும், பையாதுஜ் என்றும் போற்றப்படுகிறது. 

இந்தத் திருநாள். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இதற்கு புராண கதையும் உள்ளது. 

ஒரு முறை ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை அன்று, தன் சகோதரி எமியின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூடி, திலகம் இட்டு அன்புடன் வரவேற்றாள் எமி. இருவரும், ஒருவருக்கு ஒருவர் பரிசுகளையும் பலகாரங்களையும் கொடுத்து தங்கள் பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர். 

சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன. சகோதரியின் அன்பில் மகிழ்ந்த எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால் திலகம் இட்டுக் கொள்பவர்களை, நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு அகால மரணம் கிடையாது’ என வரம் தந்தார்.  

எனவே எம துவிதியைத் திருநாளில், வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close